சத்யராஜ் மூன்றாவது இன்னிங்சில் இப்பொழுது சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கிறார். நடிக்க வந்த புதிதில் தனது கேரியரை வில்லனாக ஆரம்பித்தார். அப்பொழுது நாள் சம்பளம், பேட்டா காசு, என வாங்கி வந்தவர் இப்பொழுது பெரிய ஹீரோக்களை விட அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக பெரிய ஹீரோக்கள் அனைவரும் தங்கள் படங்களில் சத்யராஜ் தான் வேணும் என்று அடம்பிடிக்கிறார்கள். முதலாவது இன்னிங்ஸில் வில்லன், ஹீரோ என அசத்தி வந்த சத்யராஜ், அதன்பின் தமிழ் சினிமாவில் கௌரவ தோற்றம், குணச்சித்திர வேடம் என கலக்கினார்.
இப்பொழுது மூன்றாவது இன்னிங்ஸ்சை தொடங்கியுள்ளார். அதாவது தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தி, தெலுங்கு என தன்னுடைய கேரியரை விரிவுபடுத்தி விட்டார். அதற்கு ஹீரோக்கள் ரேஞ்சுக்கு சம்பளம் அவருக்கு கொடுக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள் தான்.
ஏ ஆர் முருகதாஸ் ஹிந்தியில் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இதற்காக சத்யராஜ்க்கு பேசப்பட்ட சம்பளம் 30 கோடிகள். தமிழில் பெரிய ஹீரோக்கள் பல பேர் இந்த சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் நடிக்கும் ஹர ஹர வீர மல்லு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் சத்யராஜ். இதற்காகவும் ஒரு பெரும் தொகையை சம்பளமாக வாங்கியுள்ளார். இந்த படத்தில் இவர்களுடன் நிதி அகர்வால், பாபிதியோல் போன்றவர்களும் நடிக்கிறார்கள்.