ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

யாஷை வைத்து இயக்கும் சத்யராஜ் பட குழந்தை நட்சத்திரம்.. ரிலீஸ் தேதியுடன் பிரம்மாண்டமாக வெளிவந்த டீசர்

Geethu Mohandoss: கன்னட நடிகர் யாஷ் கே ஜி எஃப் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகர் ஆனவர். கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் இருந்தாலும் இவருக்கு கே ஜி எஃப் தான் திருப்புமுனையை கொடுத்தது. அந்த படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் அடிக்க, தற்போது அவருடைய சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

கே ஜி எஃப் படத்தின் மூலம் வைரலான இவரின் அடுத்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அந்த படத்தின் அப்டேட் இன்று வெளியானது. நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த படம் என்பதை தாண்டி, இந்த அப்டேட்டில் படத்தின் இயக்குனர் கீது மோகன் தாஸ் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறார்.

Also Read:சரோஜாதேவி போல வர ஆசைப்பட்ட நடிகை.. கடைசில பலான வழக்கு பாய்ந்ததுதான் மிச்சம்

கீது மோகன் தாஸ் என்று அறியப்படும் காயத்ரி தாஸ் இயக்கிய லையர்ஸ் டைஸ் படம் பல தேசிய விருதுகளை வென்றது. மலையாள மற்றும் பாலிவுட் படங்களை இயக்கியதன் மூலம் இவர் பிரபலமான இயக்குனரானார். மேலும் நடிகையாகவும் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமான இவர், குழந்தை நட்சத்திரமாகவும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

சத்யராஜ் பட குழந்தை நட்சத்திரம்

1988 ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. சத்தியராஜ், சுகாசினி, ரேகா, ரகுவரன் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இதில் சத்யராஜ் மற்றும் சுகாசினி தம்பதியர் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தை கேரக்டரில் நடித்தவர் தான் இந்த கீது மோகன்தாஸ்.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரம் ஆக டின்னு என்னும் கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார் கீது. அது மட்டுமில்லாமல் உலகநாயகன் கமலஹாசன் தயாரித்து, நடிகர் மாதவன் நடித்த நளதமயந்தி படத்திலும் மாதவனுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். தமிழில் கதாநாயகியாக நடிக்கும் முதல் படத்திலேயே தமயந்தி என்னும் கேரக்டரில் தன்னுடைய ஆளுமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இப்போது இவர் நடிகர் யாஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. அட! நம்ம சத்யராஜ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் இவங்க தானா என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆச்சரியத்துடன் நடிகை மற்றும் இயக்குனர் கீது மோகன் தாஸ் அவர்களை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்திற்கு டாக்ஸிக் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏப்ரல் பத்தாம் தேதி 2025 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பட குழு வெளியிட்டு இருக்கிறது. மேலும் நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read:ஊரே போற்றும் எம்ஜிஆரையே மோசமான காட்சிகளில் நடிக்க வைத்த 5 படங்கள்.. இயக்குனரால் ஏற்பட்ட அவமானம்

Trending News