TVK-Vijay: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததே பலருக்கு பிடிக்கவில்லை. அதிலும் கடந்த மாதம் அவர் தன்னுடைய முதல் மாநில மாநாடை வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறார்.

அதிலும் அப்போது அவர் பேசிய பேச்சு இப்போதும் கூட அரசியல் களத்தில் தீப்பொறியாய் அனல் வீசி கொண்டிருக்கிறது. இதில் ஆளும் கட்சி தான் தன்னுடைய எதிரி என்பதை விஜய் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

மேலும் அவருடைய இலக்கு 2026 தேர்தலில் ஜெயித்து முதல்வர் நாற்காலியை பெறுவது தான் என்பதும் தெரிந்து விட்டது. அதற்கான வேலைகளை அவர் சில வருடங்களாக சத்தம் இல்லாமல் செய்து வந்தார்.

தற்போது கட்சியின் தலைவராக வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் அதிகம் டென்ஷன் ஆனது நாம் தமிழர் கட்சி தான். அக்கட்சியின் தலைவர் சீமான் விஜய் எப்படியும் தன்னுடன் கூட்டணி வைத்து விடுவார் என எதிர்பார்த்தார்.

அதனாலேயே மாநாட்டிற்கு முன்பு தம்பி என சப்போர்ட் செய்து வந்தார். ஆனால் மாநாடு முடிவுக்குப் பிறகு அந்த மனநிலை அப்படியே மாறிவிட்டது. தற்போது எந்த மேடையில் பேசினாலும் சீமான் மற்றும் அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் விஜயை தாக்கி பேசுவதில் தான் குறியாக இருக்கின்றனர்.

அதன்படி தற்போது விஜய் ஆளும் கட்சியின் ஊழல் விவரங்களை தோண்டி துருவுவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதை நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் ட்வீட் போட்டு நக்கல் அடித்துள்ளார். அதில் அவர் திமுகவின் ஊழல்களை பட்டியலிடும் விஜய்.
இவர் பெரிய விஜிலென்ஸ் ஆபீஸர் புதுசா வந்து கண்டுபிடிக்க போறாரு. அந்த ஊழல் பணத்தில் பீஸ்ட் படம் வரைக்கும் சம்பளம் வாங்கும் போது தெரியலையா பூமர் தனமா இருக்கு என பதிவிட்டுள்ளார்.
இதற்கு விஜய் ரசிகர்களும் கட்சியின் தொண்டர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். என்ன தமிழ் தேசியம் திராவிடத்தை ஆதரிக்கின்றது. தலைவர் சொன்னபடி திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்னு தான் போல.
உன்னாலேயே கட்சி காலி ஆகிட போது பத்தல இன்னும் நல்லா கதறு என மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அதேசமயம் சீமான், நான் ஜெயலலிதா கலைஞர் இருக்கும்போதே கட்சி ஆரம்பித்தவன். இவர்களை விட விஜய் பெரிய ஆளா என விமர்சித்துள்ளதும் சர்ச்சையாகியுள்ளது.