வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நிவேதா பெத்துராஜ் பற்றி வெளிவந்த செய்தி அத்தனையும் உண்மை.. ஆதாரத்துடன் மல்லு கட்டும் சவுக்கு

Savukku Shankar Nivetha Pethuraj: சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அப்படித்தான் இருக்கிறது இப்போ சவுக்கு சங்கர் கையில் எடுத்திருக்கும் விஷயம். அரசியல் கட்சிகளைப் பற்றி யூடியூப் சேனல்களில் ரொம்பவும் தைரியமாக பேசக்கூடிய ஆள் சவுக்கு. இவர் எப்படி இத மாதிரி பேசுறாரு, இவர் மேல ஏன் அரசியல் கட்சிகள் ஆக்சன் எடுக்கல என்ற சந்தேகம் தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருக்குமே இருக்கிறது. அதை தாண்டி நிறைய விஷயங்களில் குட்டையை குழப்பி, அது போலிஸ் கேஸ் வரை போயிருக்கிறது.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் சவுக்கு சங்கர் கையில் எடுத்திருக்கும் விஷயம்தான் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டில் சினிமா மற்றும் அரசியலை தனியாக பிரிக்க முடியாது. அப்படித்தான் அரசியல் மற்றும் சினிமா நடிகைகளும். சில அரசியல்வாதிகளின் குற்றங்களில் பெரும்பாலும் சிக்கி இருப்பது சினிமா நடிகைகளாக தான் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

திமுக கட்சிக்கு எதிராக நிறைய விஷயங்களை சவுக்கு சங்கர் தன்னுடைய பேட்டிகளில் பேசுவது உண்டு. அவர் அப்படி சமீபத்தில் பேசிய விஷயம் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி. உதயநிதி ஸ்டாலின் நடிகை நிவேதா பெத்துராஜ் உடன் இணைந்து பொதுவாக என் மனசு தங்கம் என்னும் படத்தில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் உதய் , நிவேதாவுக்கு 50 கோடி மதிப்பிலான பங்களாவை வாங்கி கொடுத்ததாக சவுக்கு சங்கர் சொல்லியிருந்தார்.

Also Read:பிரம்மாண்ட சீரியலில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ்.. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கு

சவுக்கு சங்கரின் இந்த குற்றச்சாட்டுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்திருந்தார். தன்னுடைய குடும்பம் 20 வருடமாக துபாயில் வசித்து வருவதாக நிவேதா பதிவிட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் 16 வயதிலிருந்து அவர் பொருளாதார ரீதியாக தன்னை சுதந்திரமாக வைத்துக் கொண்டதாக சொல்லி இருக்கிறார். ஒரு பெண்ணின் மேல் குற்றம் சாட்டுவதற்கு முன் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பேசுங்கள் என சவுக்கு சங்கருக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கரிடம் நிவேதா பெத்துராஜ் சொன்ன பதிலடி பற்றி கேட்கப்பட்டது. அதுக்கு சவுக்கு சங்கர் நான் நிவேதா பெத்துராஜை பற்றி சொன்னது அத்தனையும் உண்மை. என்னிடம் ஆதாரம் கூட இருக்கிறது. நான் சொன்னது குறித்து அவர் என் மீது கேஸ் கொடுக்கட்டும். நான் கோர்ட்டில் இந்த வழக்கை பார்த்துக் கொள்கிறேன் என்று பத்திரிகையாளர்களிடம் பதில் சொல்லி இருக்கிறார் சவுக்கு.

இதற்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருத்திகா உதயநிதி ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் ஏன் இந்த மனிதர்களின் நடவடிக்கை வித்தியாசமாக இருக்கிறது, எல்லோருக்கும் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதா என எழுதி இருந்தார். இது உதயநிதி மற்றும் நிவேதா பெத்துராஜின் பிரச்சனையை பற்றி தான் என நிறைய பேர் கமெண்ட் செய்து வந்தார்கள். இப்போது சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கு தொடுப்பீர்களா என நிவேதாவை ரசிகர்கள் டுவிட்டரில் கேட்டு வருகிறார்கள்.

Also Read:சைடு போஸில் கிறங்கடித்த நிவேதா பெத்துராஜ்.. புகைப்படம் பார்த்து ஏங்கி போன ரசிகர்கள்

Trending News