தமிழ்நாட்டை போலவே, தகுதியான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் உதவி திட்டம் உள்ளது. இதை அங்கு உள்ள பெண்கள் போராடி, தனது 1000 ரூபாயை பெற்று வரும் நிலையில், உள்ளே புகுந்து சம்பவம் செய்திருக்கிறார் Johny sins. அவர் மட்டும் தான் என்று பார்த்தால் அவர் மனைவி சன்னி லியோனும் இந்த வேலையை பார்த்திருக்கிறார்.
ஏதே.. ஜானி சின்ஸ் மனைவி சன்னி லியோனா? இது எப்போ.. என்று ஷாக் ஆகிவிட்டிர்களா? இந்த உருட்டையும் நம்பி ஏமாந்து இருக்கிறது ஒரு கூட்டம். என்னவென்று சொல்வது? இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழர்களுக்கு யார்ரா நீங்கல்லாம்.. என்பது போல தான் இருக்கிறது.
முக்கியமாக இதை கூட சரி பார்க்காமல் ஒரு அரசு பணத்தையும் வழங்கி இருக்கிறது என்றால், எப்பேர்ப்பட்ட மகா பிரபு தலைவராக ஆகி இருக்க வேண்டும் என்றும் நக்கல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
ஏலே.. அது என் பொண்டாட்டி-லே Moment
சத்தீஸ்கர் மாநிலத்தில், mahtari vandan yojana என்று ஒரு திட்டம் உள்ளது. இதில் சன்னி லியோனும் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை பெற்று வருகிறார் என்று சமீபத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது. அப்போதுதான் என்ன சங்கதி என்று ஆராய்ந்துள்ளார்கள் அதிகாரிகள். அப்போது தான் ஒரு நபர் பார்த்த ஒரு வினோத வேலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பஸ்தார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 10 மாதங்களாக சன்னி லியோன் பெயரை வைத்து, மாதம் 1000 ரூபாய் பெற்றுள்ளார். இதில் இன்னொரு கூத்து என்னவென்றால், கணவன் பெயரில் Johny Sins என்று உள்ளது.
இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்கள் பெயர் தெரிகிறதோ இல்லையோ.. பலான விடீயோக்களில் வருபவர்கள் பெயர் மட்டும் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார்.
இதை இரண்டு முறை அதிகாரிகள் கவனித்து பெயரை நீக்க சொல்லி, நீக்காமல் தொடர்ந்து உதவி தொகை வழங்கி வந்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் செய்தால் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவிக்காமல், பாராட்டு விழா-வா நடத்துவார்கள்..
எது எப்படியோ, இந்த கூத்தை பார்த்த சன்னி லியோன் கணவருக்கு.. “ஏலே.. அது என் பொண்டாட்டி-லே Moment” ஆக தான் இருந்திருக்கும்.