செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

வரிசையாக பிக்பாஸில் என்ட்ரியாகும் சீசன்-7 போட்டியாளர்கள்.. பசுந்தோல் போர்த்திய நரியை இறக்கி விட்டுருக்காங்க!

21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவடைய உள்ளதால் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதிலும் இப்போது பிக் பாஸ் வீட்டில் வரிசையாக பிரபலங்கள் என்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வருபவர்கள் எல்லாம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாம். ஏனென்றால் வருபவர்கள் எல்லாம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர்கள் என்றாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் முதலாக  நுழைப்பப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

Also Read: இந்த வாரம் பிக் பாஸில் என்ட்ரி தர போகும் பிரபலம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

ஆகையால் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அதன் இருப்பிடத்தை பார்த்துவிட்டு விரைவில் துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகின்றனர். அந்த வகையில் நேற்று சுரேஷ் சக்கரவர்த்தியுடன் அகமத் அடுத்த சீசனில் ஒரு போட்டியாளராக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அவரைத் தொடர்ந்து இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பசுந்தோல் போத்திய நரியை இறக்கி விட்டுருக்காங்க! தற்போது விஜே பார்வதி சீசன் 6 போட்டியாளர்களுடன் வீட்டை கலகலப்பாக்க உள்ளே நுழைந்து இருக்கிறார். ஆனால் இவர் மாடர்ன் வனிதா என்பதால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், வேண்டுமென்றே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் வம்பு இழுப்பார்.

Also Read: பிக் பாஸ் வீட்டில் நுழையும் இந்த சீசனின் வெளியேறிய போட்டியாளர்.. ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்

ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் இவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இப்போது பிக் பாஸ் வீட்டில் நுழைந்திருக்கும் விஜே பார்வதி போட்டியாளர்களுடன் வாய் வம்பு இழுக்க போகிறார்.

அதிலும் அசீம் விஜே பார்வதியுடன் மல்லு கட்ட வேண்டுமென்றே வேட்டி கட்டிக்கொண்டு தயாராக இருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் பிக் பாஸ் ரசிகர்கள், ‘புடுங்குறது பூராவுமே தேவையில்லாத ஆணிகள். அதுலயும் இன்னைக்கு கெஸ்ட்டா வந்திருக்க ரெண்டு ஆணியும் மொக்கையிலேயே மொக்கை ஆணியா இருக்கிறது’ என்று விமர்சிக்கின்றனர்.

Also Read: பொங்கல் டிஆர்பி-காக அடித்துக்கொள்ளும் 5 சேனல்கள்.. டிவியில் ஒளிபரப்பாக உள்ள மொத்த படங்களின் லிஸ்ட்

Trending News