வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாத்தி படத்தின் 2வது நாள் வசூல்.. கோடிகளை வாரி குவிக்கும் தனுஷ்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வாத்தி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

வாத்தி படத்தின் தொடக்கத்தில் ஒரு வாத்தியாருக்கான தோற்றம் தனுசுக்கு இல்லை என்றாலும் போக போக அவரை ஆசிரியர் என ரசிகர்களை ஏற்றுக் கொள்ள வைத்து விட்டார். மேலும் இந்த படத்தில் கல்வியை வைத்து எப்படி பணம் பார்க்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டி இருந்தார்கள்.

Also Read : கருத்து கேட்டு கருத்துபோன ப்ளூ சட்டை மாறன்.. தனுஷ் வாத்தியை வச்சி செய்து விமர்சனம்

வாத்தி படத்தில் மைனஸ் பாயிண்ட் என்னவென்றால் முழுக்க முழுக்க தெலுங்கு சாயலில் இருப்பது போல படம் அமைந்திருந்தது. அதுமட்டுமின்றி சிலர் மட்டுமே தமிழ் சினிமாவை சார்ந்தவர்களாக இருந்தார்கள். பெரும்பாலானோர் தெலுங்கு பிரபலங்களாக இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் வாத்தி படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 8 கோடி வசூல் செய்த நிலையில் உலக அளவில் 15 கோடி வசூல் செய்திருந்தது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் வாத்தி படம் இரண்டாவது நாள் வசூலிலும் கோடிகளை குவித்துள்ளது. அதன்படி இரண்டாவது நாள் முடிவில் 11 கோடி வசூல் செய்துள்ளது.

Also Read : வாத்தியாராக அதிரடி காட்டும் தனுஷ்.. சுடச்சுட வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

மொத்தமாக வாத்தி படம் இதுவரை கிட்டத்தட்ட 25 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தனுஷ் ரசிகர்கள் இப்படத்திற்கு பேர் ஆதரவு கொடுத்து வருவதால் தொடர்ந்து படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கு மொழியிலும் இந்த படத்திற்கு ஏக போக வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொடர்ந்து தனுஷின் படங்கள் தோல்வி அடைந்து வந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படம் ஒரு நடுநிலையான வெற்றி கொடுத்த நிலையில் வாத்தி படம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆகையால் தனுஷ் தொடர்ந்து தனது அடுத்த படங்கள் மாஸ் வெற்றி படங்களாக கொடுக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளார்.

Also Read : இயக்குநர்களை நம்பி மோசம் போன டாப் 3 ஹீரோக்கள்.. மரண பயத்தில் வாத்தி தனுஷ்

Trending News