புதன்கிழமை, நவம்பர் 27, 2024

இரண்டாம் கட்ட ஹீரோக்கள் வாங்கும் சம்பளம்.. பெத்த காசு பார்க்கும் ஜெயம் ரவி, கிள்ளுக்கீரையாய் அருண் விஜய்

ரஜினி, கமல், விஜய், அஜித் என முதல் தர ஹீரோக்கள் லிஸ்டில் இருப்பவர்கள் 200 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள். வருடத்திற்கு ஒரு படங்கள் நடித்தாலும் போதும் என்ற அளவில் தான் இவர்களின் எண்ணம் இருக்கிறது. அதுவும் பெரிய பட்ஜெட்டில் நடித்துவிட்டு ஒதுங்கி விடுவார்கள். இவர்களைத் தாண்டி இரண்டாம் தர ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் விவரம் இதோ

கார்த்தி: 2007ஆம் ஆண்டு பருத்திவீரன் படத்தில் அறிமுகமான கார்த்தி இன்று 15 வருடங்களையும் தாண்டி சினிமாவில் நடித்து வருகிறார். மணிரத்தினத்திடம் அசிஸ்டன் இயக்குனராக பணியாற்றி வந்தார். இன்று ஒரு படத்திற்கு கார்த்தி வாங்கும் சம்பளம் 15 கோடிகள். கடைசியாக மெய்யழகன் படத்தில் இந்த சம்பளம் தான் வாங்கினாராம்.

ஜெயம் ரவி: அடங்கமறு, டிக் டிக் டிக் போன்ற படங்களுக்கு பின் இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் ஓடவில்லை. ஆனால் ஜெயம் ரவி இதுவரை சம்பளத்தை குறைத்ததாக தெரியவில்லை. ஒரு படத்திற்கு இவர் வாங்கும் சம்பளம் 16 கோடிகளாம். சுதா கொங்கார இயக்கும் புறநானூறு படத்தில் வில்லனாக நடிக்க இவர் இந்த சம்பளத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

விஷால்: எட்டு கோடிகள் வரை சம்பளம் வாங்கி வருகிறார். சமீபத்தில் மார் ஆண்டனி படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 7 கோடிகள். இப்பொழுது இவருக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகள் வருகிறது. அதற்கு 14 கோடிகள் கேட்கிறாராம்.

எஸ் ஜே சூர்யா: சமீப காலமாக முக்கால்வாசி படங்களில் வில்லன் அவதாரம் எடுத்து வருகிறார். கடைசியாக தனுஷின் ராயன் படத்திற்கு எஸ் ஜே சூர்யா வாங்கி சம்பளம் 10 கோடிகள். சர்தார் 2, வீர தீர சூரன் போன்ற படங்களில் தற்போது நடித்த வருகிறார்.

அருண் விஜய்: நல்ல திறமைகள் இருந்தும் சினிமாவில் ஒரு பெரிய டர்னிங் பாயிண்டுக்காக காத்திருந்தவருக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அமைந்து வருகிறது. தனுஷின் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அருண் விஜய் வாங்கிய சம்பளம் 5 கோடிகள். வணங்கான் படத்திற்கு பிறகு இவரது சம்பளம் உயர வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News