திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

30 வருடத்திற்கு பிறகு வெளிவரும் இரண்டாம் பாகம்.. சரத்குமார் நிராகரித்து இன்று வரை ஏங்கும் சூப்பர் ஹிட் மூவி

Actor Sarathkumar: சமீபகாலமாக இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக லாரன்ஸ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதே போல் 30 வருடத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் ஒரு படத்தை எடுக்க முடியுமா என எல்லோரையும் ஆச்சரிய பட வைத்திருந்தது ஒரு படம். மேலும் அந்த படத்தில் முதலாவதாக சரத்குமாரை தான் படக்குழு அணுகி உள்ளது. ஆனால் படத்தின் கதை பிடித்திருந்தும் சரத்குமார் அப்படத்தில் நடிக்கும் மறுத்துவிட்டாராம்.

Also Read : தன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி வாய்ப்பை தேடி நடிக்கும் 6 நடிகர்கள்.. ஒரே வெற்றியால் 8 படத்திற்கு புக் ஆன சரத்குமார்

காரணம் என்னவென்றால் சரத்குமாரை இயக்குனர் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் மீசையை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அப்போது உள்ள சூழலில் என்னால் அப்படி நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகு தான் சரத்குமாருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்திருந்தார்.

அதாவது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படம் தான் அது. கே டி குஞ்சுமோனன் தயாரிப்பில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலை வாரி குவித்தது. அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே பட்டி தொட்டி எங்கும் பரவியது.

Also Read : சரத்குமார் சங்கை பிடித்த இருவர்.. இக்கட்டான சூழ்நிலையில் சங்கரை விட்டுக் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்

இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை குஞ்சுமோனன் தயாரித்து வருகிறார். ஆரம்பத்தில் ஷங்கரை அணுகிய போது அவர் இந்த படத்தை இயக்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகு வேறு ஒரு இயக்குனரை வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார். மேலும் பாகுபலி புகழ் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

மலையாள நடிகரான சேத்தன் சீனு என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகையான நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்கிறாராம். ஜென்டில்மேன் முதல் பாகத்தை தவற விட்டு விட்டோமே என தற்போது வரை சரத்குமார் ஏங்கி வருகிறாராம். இப்போது பல வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் உருவாகுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read : தயாரிப்பிலும் தலையை விட்டு சின்னாபின்னமான சரத்குமாரின் 5 படங்கள்.. சுப்ரீம் ஸ்டார்க்கு வந்த மோசமான நிலைமை

Trending News