வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

எதிர்நீச்சல் சீரியலை துவம்சம் செய்ய வரும் திருமுருகனின் 2ம் பாகம்.. எகிறும் டிஆர்பியால் வாயடைத்துப் போகும் சேனல்கள்

Thirumurugan : இப்போது தொலைக்காட்சிகளில் சீரியலின் டிஆர்பியை ஏற்றுவதற்காக பக்கவாக பிளான் போட்டு பல தொலைக்காட்சிகள் புது தொடர்களை இறுக்கி வருகிறார்கள். ஆனால் எதுவுமே வேலைக்கு ஆனா பாடு இல்லை.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் ஓரளவு நல்ல டிஆர்பியை பெற்று வருகிறது. இதை எப்படியாவது முந்த வேண்டும் என்பதற்காக விஜய் டிவி பல யுக்திகளை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் எதிர் நீச்சலையே தும்சம் செய்யும் அளவிற்கு சன் டிவியில் மற்றொரு சீரியல் இறங்க இருக்கிறது. அதுவும் திருமுருகனின் சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாம் பாகமாக வர இருக்கிறது. இது ரசிகர்களுக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நாதஸ்வரம் இரண்டாம் பாகம்

அதாவது சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி, நாதஸ்வரம் என்ற சூப்பர் ஹிட் தொடர்களை இயக்கியவர் தான் திருமுருகன். இயக்குனராக மட்டுமின்றி இந்தத் தொடர்களில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகனாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதைத்தொடர்ந்து கல்யாண வீடு, குலதெய்வம் போன்ற தொடர்களை இயக்கியிருந்தார். தமிழ் புத்தாண்டு அன்று புதிய தொடருடன் மீண்டும் சந்திக்க இருப்பதாக கூறியிருக்கிறார். அதுவும் நாதஸ்வரம் இரண்டாம் பாகம்தான் வர இருக்கிறது.

ஏற்கனவே இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஒரே ஷாட்டில் நாதஸ்வரம் எபிசோடு எடுத்து திருமுருகன் சாதனை படைத்திருந்தார். மேலும் இந்த தொடர் வந்தால் கண்டிப்பாக டிஆர்பியில் நம்பர் ஒன் ரேட்டிங் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் மற்ற தொலைக்காட்சிகளுக்கு இன்னும் நெருக்கடி தரும் விதமாகத்தான் நாதஸ்வரம் 2 என்ட்ரி இருக்கப் போகிறது. இந்தத் தொடரின் டிஆர்பியால் மற்ற சேனல்கள் வாயடைத்து போக உள்ளது.

Trending News