திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திரும்பவும் தலைக்கனம் பிடித்த தயாரிப்பாளர் உடன் இணையும் தளபதி.. எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டீங்க

Actor Vijay: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மேற்கொள்ளும் லியோ படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் விஜய் மேற்கொள்ளும் அடுத்த படம் குறித்து வெளியான புது அப்டேட் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் இருக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார் விஜய். ஒரு பக்கம் நடிப்பு, ஒரு பக்கம் அரசியல் என குழப்பத்தில் இருக்கும் இவர் தன் அடுத்த படம் குறித்து வெளியீட்டுள்ள தகவல், ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகிறது.

Also Read: விஜயகாந்த், ராதிகா இணைந்து கலக்கிய 6 படங்கள்.. கிட்டத்தட்ட 13 படங்களில் கைகோர்த்த ஜோடி

சமீபத்தில் வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் விஜய் மேற்கொண்ட படம் தான் வாரிசு. இப்படம் மக்களிடையே பல கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. இருப்பினும் வணிக ரீதியான லாபத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இப்படம் குறித்து தில்ராஜ் பேசிய பேச்சு விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இணைய போகும் தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படம் தான் தளபதி 68.

Also Read: லோகேஷுடன் இணைய ஆசைப்பட்ட பாலிவுட் பிரபலம்.. ஸ்கிரிப்டை மாற்றி வாய்ப்பு கொடுத்த சம்பவம்

இதற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் தற்பொழுது தளபதி 69 படமாக தில்ராஜுடன் விஜய் இணைய போவதாக தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கு பட இயக்குனரான மெஹர் ரமேஷ், தயாரிப்பாளர் ஆன தில்ராஜுடன் விஜய் நடிக்க கால்ஷீட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த பேச்சு வார்த்தை வாரிசு படப்பிடிப்பின் போதே நடைபெற்றதாகவும், மேலும் கதை சொன்ன மெஹர் ரமேஷிற்கு விஜய்யும் ஓகே சொல்லிவிட்டாராம். அதைத்தொடர்ந்து தளபதி 68 படத்திற்கு பிறகு இப்படத்தை மேற்கொள்ளப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: மாறன் தயாரிப்பில் ரஜினி நடித்த 4 படங்களின் மொத்த வசூல்.. சுக்கிர திசையை தன்வசம் வைத்திருக்கும் சன் பிக்சர்ஸ்

Trending News