வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

புஷ்பா 2 புரமோசனில் இயக்குனரை காணோமே? என் மேல தப்பு இல்லை சார்.. புரடியூசரை அலறவிட்ட தேவி ஸ்ரீ பிரசாந்த்

புஷ்பா 2 பட புரமோசன் நிகழ்ச்சியில் பேசிய தேவிஸ்ரீ பிரசாத், என் மேல் எந்த தப்பும் இல்லை என தயாரிப்பாளரை விளாசியுள்ளார். இதுகுறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2. முதல் பாகம் வெளியாகி 3 ஆண்டுகளாக 2 வது பாகம் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃப்கத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி அதிக வியூஸை பெற்று சாதனை படைத்துள்ள நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இதையொட்டி, புஷ்பா தி ரூப் படத்தின் புரமோசன் நிகழ்ச்சி பல்வேறு மா நிலங்களிலும் வெளிநாட்டிலும் நடந்து வருகிறது. பாட்னாவில் இதன் டிரெயிலர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்த நிலையில், நேற்று சென்னையில் நேற்று கிஸ்ஸி என்ற 2 வது சிங்கில் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது.

புஷ்பா 2 புரமோசன் நிகழ்ச்சியில் இசைமைப்பாளர் DSP

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; ”புஷ்பா படம் வெளியான பின் அதைக் கொண்டாடினீர்கள். ஆனால், புஷ்பா 2 வெளியாகும் முன்பே கொண்டாடி வருகிறீர்கள். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

இப்படத்தில் பணியாற்றியதற்காக எனக்கும், அல்லு அர்ஜூனுக்கும் தேசிய விருது கிடைத்தது. அதை பாக்கியமாக கருதுகிறேன். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நடந்து கொண்டிருக்கிறது. வேலையால் சுகுமாரால் வரமுடியவில்லை. இப்படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.

மேலும், இப்படத்துக்கு நான் சரியான நேரத்தில் பாடலை கொடுக்கவில்லை, சரியான நேரத்தில் இசையமைக்க வில்லை, நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்திற்கு வரவில்லை எனக் குறை சொல்கிறீர்கள். என் மீது உங்களுக்கு அன்பு இருக்கிறது. அதைவிட புகார்கள் சொல்கிறீர்கள். நான் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 25 நிமிடம் முன்பே வந்துவிட்டேன்.

ஆனால் நீங்கள் உள்ளே வருதை ஷூட் செய்ய வேண்டி என்னை வெளியே நிற்க வைத்துவிட்டனர். இதை தனியாக கேட்டால் கிக் இல்லாமல் போய்விடும். என் பழக்கம் எதுவாக இருந்தாலும் நேரடியாக கேட்பது அதனால் கேட்டுவிட்டேன்” என்று தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்தார்.

கங்குவா படத்தின் பின்னணி இசையமைப்பு, தியேட்டரில் காது அடைக்கும்படியான இரைச்சல் இதெல்லாம் பெரும் புகார்களாக குவிந்த நிலையில், புஷ்பா 2 படத்துக்கு சரியாக இசையமைக்கவில்லை, சரியாக நேரத்துக்கு பாடல் தரவில்லை என்பதால் தேவி ஸ்ரீ பிரசாத்துக்குப் பதில் தமனை இப்படத்தில் இசையமைப்பாளராக்க பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் புஷ்பா 2 புரமோசன் நிகழ்ச்சியிலேயே தயாரிப்பாளரை லெட்ப் ரைட் வாங்கியதுபோல் தேவிஸ்ரீ பிரசாத் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News