புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நடுவுல நின்ன லாரில அடிபட்டுருவ! இப்படி திட்டிட்டு, விஜய்யை உச்சி குளிர வைத்தாரா சீமான்?

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் தாக்கல் அதிகம் இருக்கிறது, இன்னும் ஓயவில்லை. சென்னையில் இந்தப் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த 300 குடும்பங்களை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வரவைத்தார் விஜய். அவர்களுக்கு நேற்று உதவிகள் வழங்கி, ஒவ்வொருவரிடமும் குறைகளைக் கேட்டார்.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்க வேண்டும். வீட்டைவிட்டுக் கூட விஜய் வரவில்லையே என மற்ற கட்சிகளும், சினிமா & அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்கள்.

தவெக தலைவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றால், அங்கு கூட்டம் கூடி விடும். உதவி செய்யும் நிகழ்ச்சியை நடத்த முடியாது. அதனால் தான் விஜய் பாதிக்கப்பட்ட மக்களையே நேரில் அழைத்து உதவி செய்தார் என தவெக சார்பில் கூறப்பட்டது.

விஜய்யின் உதவி செய்யும் குணத்தைப் பாராட்டிய சீமான்!

இதுகுறித்து சீமான், “உச்ச நடிகர் அங்குபோய் நின்றால் பாதிக்கப்பட்டவர்களை விட அவரை பார்க்க வரும் மக்கள் கூட்டம் அதிகமாகும். அதுவே தனி பிரச்சனை ஆகும். விஜய்க்கு உதவி செய்யும் மனம் உள்ளதே அது போதும். அதைப் பாராட்டுகிறேன்” என்று கூறினார்.

தவெக முதல் மாநாட்டுக்கு பின் விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்தார் சீமான். லாரியில் அடிபட்டு செத்துருவ அப்படின்னு சொல்லிட்டு இப்போ செஞ்சதுக்கு பாராட்டு மழை வேறயா என்பது போன்ற கேள்விகள் எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

Trending News