தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்த தருவாயில் தன்னுடன் எப்படியாவது விஜயை இணைத்து விட வேண்டும் என்று பெரும்பாடு பட்டார் சீமான். ஆரம்பத்தில் தம்பி, என் உயிர், என்று பேசிய சீமான் தற்போது அந்தர் பல்டி அடித்து உள்ளார்.
பச்சோந்தி கூட இவ்வளவு சீக்கிரத்தில் நிறம் மாறாது, ஆனால் இவரோ, அதை விட ஸ்பீடாக இருக்கிறார். இந்த நிலையில் சீமானின் பச்சோந்தி குணம் என்று, சமீபத்தில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
விஜய் நடித்த கத்தி பட விவகாரத்தில் நான் விஜயை ஆதரிக்கின்றேன் என்று சீமான் உள்ளே வந்தார். அதன் பிறகு பகலவன் என்ற படத்தின் கதை சொல்லி தம்பி என் இயக்கத்தில் நடிக்கிறார் என்று ஆரம்பித்தார். விஜய் அந்த படத்தில் நடிக்க மறுத்ததால், புலிகள், பிரபாகரன் என்று பேசி வருகின்றேன் தம்பிக்கு அதனால் சிக்கல் வந்து விடும்-ன்னு பயப்படுகிறார் என்று கூறினார்.
எதுக்கு ஜெயலலிதாவிடம் மன்னிப்பு
அடுத்து விஜய் நடித்த தலைவா படத்திற்கு சிக்கல் வந்த போது ஆண்மையுடன் நடந்து கொள்ளவில்லை, எதுக்கு கை கட்டிக் கொண்டு போய் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்ட என்று கடுமையாக தரம் தாழ்ந்து விமர்சித்தார். அந்த கடுப்பில் போய் சிம்புவை ஆதரித்து சிம்புவை வைத்து பத்து படம் புரட்சிகரமா எடுத்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தார். ஆனால் சிம்புவோ, ‘போயா யோவ்..’ என்று கிளம்பிவிட்டார்.
அடுத்து விஜய் என் மேடை கருத்தை தான் மெர்சல் படத்தில் பேசி நடிக்கிறார் குறிப்பாக “ஆளப்போறான் தமிழன்” என்ற பாடல் எனக்கு எழுதியது தான் என்று ஒரு புதிய உருட்டை நன்றாக உருட்டினார். அடுத்து சர்க்கார் படத்தில் சிக்கல் வந்தபோது, “அந்த எடப்பாடி கிட்ட எல்லாம் போயி கெஞ்சுவியா? வெட்கமாக இல்லை” என்று கேட்டார்.
கமல் கட்சி ஆரம்பித்தபோது இவர்களை வெளுப்பதை பார்த்து இனி எந்த கூத்தாடிக்கும் அரசியல் வரணும் என்ற ஆசையே வரக்கூடாது என்று சொன்னார். இது விஜய்க்கு பொருந்துமா என்று கேட்டபோது, எல்லாருக்கும் தான் என்றார். சீமானும் ஒரு காலத்தில் கூத்தாடி தான் என்பதை மறந்துவிட்டார் போலும்..
இந்த நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்தபோது, என்னுடன் தான் கூட்டணி என்று சொன்னார். இப்போது வேலைக்கு ஆகாது என்று தெரிந்த பின்னர் அந்தர் பல்டி அடித்துள்ளார். இதில் இவரெல்லாம் விமர்சனம் செய்யும் நிலைமைக்கு விஜய் வந்ததை நினைத்தால் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று ரசிகர்கள் புலம்பிக்கொண்டு வருகின்றனர்.
மேலும் சீமானின் இந்த குணத்தை பச்சோந்தி குணம் என்றும், இந்த பொழப்புக்கு.. என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.