வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

நொந்து போன சீமான்.. ஒரே நொடியில் தகர்ந்த கனவு கோட்டை.. எங்களுக்கு ரீச் இல்ல

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்திருக்கிறது. சைலென்ட்டாகவே இருக்கிறார் விஜய், இவருக்கு என்ன அரசியல் தெரியும் என்று பேசியவர்கள் எல்லோரும் தற்போது வாயடைத்து போயிருக்கிறார்கள்.

விஜய்க்கு அரசியல் களத்தில் இருந்து எப்போதும் ஆதரவளித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாடு தொடங்குவதற்கு முன்பு ஒரு மாதிரியும் முடிந்த பின் ஒருமாதிரியும் பேசி இருக்கிறார். பாவம் அவரே ‘confuse’ ஆகிட்டாரு..

மாநாடு துவங்குவதற்கு முன்பு, “விஜய் தொடங்குவதற்கு அவரது சினிமா பிரபல்யம் உதவும். ஆனால் தலைவனாக தன்னை தக்கவைத்துக்கொள்ள மக்கள் பிரச்னைகளை சந்தித்து மக்களின் முகமாக போராட்டக்களங்களில் நிற்க வேண்டும். தலைவனாக நிலைத்திருக்க உழைக்க வேண்டும்.”

“நாங்கள் அரசியலுக்கு வரும்போது எங்களுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இல்லை. இன்றைய பிள்ளைகள் திரைத்துறை பின்னணியில் இருந்துவரும்போது அதன் வீச்சும், ரீச்சும் அதிகமாக இருக்கிறது. தம்பி விஜய் செய்திருக்கும் ஏற்பாடுகளை பார்த்து நாம் பெருமை படவேண்டும்.”

நொந்து போன சீமான்

இப்படி பேசிய சீமான் நிகழ்ச்சி முடிந்த பிறகு நொந்து போயிருக்கிறார். தனது கொள்கையை பின்பற்றுவார் என்ற எதிர்பார்த்த சீமானுக்கு பல்ப் தான் மிஞ்சியது. ஏன் என்றால் தளபதி விஜய் பேசிய பேச்சு அப்படி. அதுமட்டுமில்லாமல் இவர்கள் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த கனவிலும் தூசி விழுந்துவிட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு, “அவர் ஒரு புதிய கொள்கையை கையில் எடுத்துள்ளார். அதை மக்கள் ஏற்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் நமது கொள்கைக்கும், அவர் கொள்கைக்கும் ஒத்துப்போகாததால், 2026-ல் கூட்டணி இல்லை” என்று சீமான் தற்போது அறிவித்திருக்கிறார்.

Trending News