சினிமா அரசியல் என பேசுகிற எல்லாவற்றிலும் பேசுபொருளாகிறவர் சீமான். இவர் இப்போது இயக்குனர் லிங்குசாமி மீது கதைதிருட்டு புகார் ஒன்றை தமிழ்நாடு திரைப்பட கதாசிரியர்கள் சங்கத்தில் பதிந்துள்ளார்.
புகாரில் கூறியிருப்பதாவது தான் சில ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய கதையை கொண்டு தமிழில் ஆனந்தம் ஜி பீமா படங்களின் இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் சீமானின் கதையை வைத்து படம் எடுக்கவிருப்பதாக கூறினார்.
நடிகர் ராம் நடிப்பில் தனது கதையை வைத்து படம் எடுக்கவிருப்பதாகவும் அது தான் எழுதிய “பகலவன்” என்கிற படத்தின் கதை என்றும் புகாரளித்தார்.ஏற்கனவே இதே கதைக்காக லிங்குசாமி சீமான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததால் இந்த புகாரை தள்ளுபடி செய்தது அமைப்பு.
சீமான் லிங்குசாமி இடையே கடந்த 2013ல் இந்த பிரச்சினை வந்ததை அடுத்து 2014ல் புரிநனதுணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது தனது கதையை லிங்குசாமி சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார் என்று புகார் தெரிவித்திருந்தார் சீமான்.
பிறகு அதே கூட்டணி வேறு கதையுடன் “அஞ்சான்” படத்தை வெற்றிகரமாக வெளியிட்டது. இருவருக்கும் பொதுவாக இந்த கதை எப்படி கிடைத்தது என்றால் காரணம் மேட்டி மாதவன் தானாம்.
அவர்தான்இந்த கதையை இருவரிடமும் கூறியிருக்கிறார் சில பல மாறுதல்களுக்கு பிறகு இருவரும் கதைக்காக போராடுகிறார்கள்.