திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்க்கு வராத சங்கம் ஏன் த்ரிஷாவுக்கு மட்டும் வராங்க.? மன்சூருக்காக குரல் கொடுத்த சீமான்

Seeman Support Mansoor: கடந்த சில நாட்களாகவே மன்சூர் அலிகான், த்ரிஷா விவகாரம் பற்றிய சர்ச்சை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் திரிஷாவுக்கு ஆதரவாக பல பிரபலங்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் சீமான் ஒருவர்தான் மன்சூருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

அதாவது தற்போது இந்த விவகாரம் பற்றி சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாகவே தெரியும். என்னுடைய கட்சியில் கூட வேட்பாளராக அவர் போட்டியிட்டு இருக்கிறார். அவர் எப்போதுமே ஒரு விஷயத்தை வேடிக்கையாக தான் சொல்வார்.

அதனால் இந்த விவகாரத்தில் அவர் தவறாக பேசியிருப்பதற்கு வாய்ப்பே கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் சங்கம் விஜய்க்கு ஒரு பிரச்சனை வந்த போது எங்கே போனார்கள். மற்ற மாநிலங்களில் எல்லாம் நடிகர்களுக்கு என நிலையான ஒரு சங்கம் இருக்கிறது. ஆனால் தமிழில் அப்படி கிடையாது.

Also read: மன்சூர் அலிகான் போல் வம்பில் சிக்கிய ரஜினி.. உங்க வயசுக்கு இப்படி பேசலாமா தலைவரே.!

அதேபோன்று இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு இருக்கிறது. ஆனால் நாட்டில் பெண்களுக்கு எதிரான எவ்வளவோ கொடுமைகள் நடந்து வருகிறது. சிறு குழந்தைகளுக்கு கூட உடல்ரீதியான தொந்தரவுகள் வருகிறது. அப்போதெல்லாம் இந்த ஆணையம் எங்கே போனது.

இப்ப த்ரிஷாவுக்கு மட்டும் ஏன் வராங்கன்னு தெரியல என ஆவேசமாக பேசியிருக்கிறார். இதன் மூலம் மக்கள் எவ்வளவோ பிரச்சனைகளை சந்திக்கும் போது இப்ப இந்த திரிஷா விவகாரம் முக்கியமா என்பது போல் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் மன்சூர் அலிகானை புடிச்சு ஜெயில்ல போடணும். அவர் மன்னிப்பு கேட்கணும் என திரை பிரபலங்கள் கொந்தளித்து வருகின்றனர். அவ்வளவு ஏன் லியோ பட குழு கூட அதைத்தான் சொல்லி வருகிறது. இந்த சூழலில் சீமான் அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது பிரச்சினையை திசை திருப்பி உள்ளது.

Also read: மொத்தமாய் கவுத்துவிட்ட மன்சூர்.. மாஸ் ஹீரோவை முழு வில்லனாக லாக் செய்த லோகேஷ்

Trending News