திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சுடுகாட்டுல கூடதான் வெற்றிடம் இருக்கு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீர்கள்.. ரஜினி காலில் விழுந்தாரா சீமான்?

சீமானின் அரசியல் வாழ்க்கையை தவேக கட்சியின் வருகைக்கு முன்பு, பின்பு என்றே பிரித்துவிடலாம். இவர் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் அரசியல்வாதி. அந்தர்பல்டி அடிப்பது எப்படி என்று குரங்குகள் கூட சீமானிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.

அப்படி நாள் ஒன்றுக்கு ஒவ்வொன்று பேசிக்கொண்டிருக்கும் சீமான் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். இதற்க்கு பின்பு அரசியல் காரணம் தவிர, வேறு ஒன்றும் இருக்க வாய்ப்பு இல்லை. இதை தொடர்ந்து இவர்களின் இந்த சந்திப்பு ரஜினியின் ரசிகர்களுக்கு கடுப்பை தான் ஏற்றியுள்ளது. இவர் ஏன் சீமானை சந்தித்திருக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தது..

சுடுகாட்டில் கூட தான் வெற்றிடம் இருக்கிறது..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, அவரை மோசமாக விமர்சித்ததில், முதலிடம் பிடித்தவர் சீமான் தான். இவரை போட்டு வெளுக்கும் வெளு-வில் இனி சினிமாக்காரன் எவனும் அரசியலுக்கு வரவே கூடாது என்று பேசி இருந்தார்.

அது மட்டுமா.. சூப்பர்ஸ்டார், வெற்றிடம் இருக்கிறது என்று கூறியபோது, சுடுகாட்டில் கூட தான் வெற்றிடம் இருக்கு.. செல்கிறீரா? என்று மோசமாக விமர்சித்து டெத் abuse செய்திருந்தார். ஆனால் இப்போது என்னவென்றால், இந்த வீர தமிழன், அவர் காலிலே விழுந்திருக்கிறார்.

இது ரஜினி வாழ்க்கையில் எப்போதும் நடக்கும் ஒன்று தான். அவரை விமர்சிப்பவர்கள் அனைவரும் கடைசியில், அவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க்கும் நிலை ஏற்பட்டு விடும். இதில் சீமான் மட்டும் விதிவிலக்கா என்ன..

Trending News