Actor Rajini : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் இமாலய வெற்றியை அடைந்திருக்கிறது. இந்த வெற்றியை பார்த்த கையுடன் ரஜினி சமீபத்தில் இமயமலைக்கு சென்று இருந்தார். அதன் பின் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரும் அவர்களுடைய கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.
அந்த வகையில் தற்போது இது குறித்து சீமான் அவர்களும் அவர்களுடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதாவது இந்த விஷயத்தை பெரிய அளவிற்கு கொண்டு போக வேண்டிய அவசியமே இல்லை. அவருக்கு என்ன விருப்பமோ, அதை தான் அவர் செய்ய முடியும். அவருக்கு சுவாமிகள், ஞான சம்பந்தப்பட்ட அடியர்கள் மீது நம்பிக்கை உண்டு. அதனால் அவர்கள் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார். இதை தவறு என்று பேசி வாக்குவாதம் பண்ணுவதை விட்டுவிடுங்கள்.
Also read: இதுவரை நிறையாத கஜானாவை நிரப்பிய பகத் பாசில்.. ரஜினி பட சம்பளத்துக்கு வச்ச பெரிய டிமான்ட்
இப்பொழுது என்னையை எடுத்துக் கொண்டால் கல்வியாளர் மற்றும் அறிவாளியை பார்த்தால் உடனே அவர்களை வணங்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும். இப்படி அவர்களுக்கு தோன்ற விஷயங்களை செய்யும் பொழுது இதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் ஒரு மனிதன் எப்படி குற்றவாளியாக மாற முடியும்.
ரஜினி, யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததால் வெங்காயம் விலை ஏறி விட்டதா என்ன? அவருக்கு விருப்பமானதை செய்ய விடுங்கள். அத்துடன் சுதந்திரமாக வாழ விடுங்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்ததை செய்வதை தவறாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவருக்கு தியானம் செய்வது, யோகிகளை வணங்குவது பிடித்திருக்கிறது. அதில் ஒன்றும் தவறு இல்லையே என்று கூறியிருக்கிறார்.
Also read: அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மீது தனிப்பட்ட நம்பிக்கையும், ஆசையும் இருக்கும். அதை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். தயவு செய்து இந்த மாதிரி விஷயங்களை முன்னுறுத்தி அவரை தொல்லை பண்ண வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். மேலும் சினிமாவை பொருத்தவரை தமிழ்நாட்டின் பெருமை அவர்தான்.
அவர் நினைத்திருந்தால் வேறு மொழியில் நடித்து பெரிய ஆளாகி இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்ய விரும்பவில்லை இந்த விஷயத்தை பாராட்ட பழகிக்கொள்ளுங்கள் என்று ரஜினிக்கு சப்போர்ட்டாக சீமான் பேசியிருக்கிறார். இப்படி சீமானின் இந்த கருத்துக்கு நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இவருடைய நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் சீமானுக்கு நன்றி தெரிவித்த பதிவு
Also read: முஸ்லிம்க்கு எதிராக படம் எடுக்கத் தூண்டிய தயாரிப்பாளர்.. ரஜினியை மோசமாக விமர்சித்த பிரபலம்