தமிழ் சினிமாவில் என்னதான் வித்தியாச வித்தியாசமான படங்களை எடுத்தாலும் கடைசியில் பெரிய வசூலை வாரி குவிப்பது எண்ணமோ கமர்ஷியல் படங்கள்தான். பார்த்து பார்த்து சலித்த கதையாக இருந்தாலும் திரைக்கதையில் எவ்வளவு சுவாரஸ்யம் தருகிறார்கள் என்பதுதான் முக்கியம்.
அதை தன்னுடைய அறிமுக படத்திலேயே அசால்டாக செய்தவர் பொன்ராம். பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பட்டிதொட்டி எங்கும் வசூலை வாரி குவித்தது.
அதனைத் தொடர்ந்து வெளியான ரஜினி முருகன் திரைப்படம் அதனுடன் போட்டி போட்ட மூன்று முன்னணி நடிகர்களின் படங்களை ஓரம்கட்டி நம்பர்-1 படமாக மாறியது. இப்படி இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கூட்டணி மூன்றாவது முறையாக சீமராஜா என்ற படத்தில் இணைந்த போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு டாப் நடிகர்களின் பட ரேஞ்சுக்கு இருந்தது மறுக்க முடியாத ஒன்று.
ஆனால் சீமராஜா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவகார்த்திகேயன் அவசரப்பட்டு மாஸ் ஹீரோ கதையை தேர்ந்தெடுத்து விட்டாரோ என்ற சந்தேகம் எழுந்தது. அந்த படம் தோல்வியைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் சில படங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த பொன்ராம் சீமராஜா படம் எதனால் தோல்வியடைந்தது என்பதையும், அதை மட்டும் தூக்கியிருந்தால் நிச்சயம் படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றிருக்கும் எனவும் வருத்தப்பட்டுக் கூறியுள்ளார்.
சீமராஜா படம் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் தான். தெலுங்கில் ராஜமவுலி ராம்சரண் கூட்டணியில் வெளியான மாவீரன் பட பாணியில் சீமராஜா படத்தை உருவாக்க நினைத்து வைத்த வரலாற்று கால பிளாஷ்பேக் காட்சி படத்தில் கொஞ்சம் கூட ஒட்டவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்தது. சீமராஜா படம் எதனால் தோல்வி அடைந்தது? என்பதை ரசிகர்கள் கமெண்டில் தெரிவிக்கலாம்.