திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சந்தியா ராகம் சீரியலில் கதிரை காப்பாற்ற பலியடாக சிக்கிய சீனுவின் அப்பா.. கார்த்திக் செய்த கொலையால் அதிர்ந்த குடும்பம்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில், கார்த்திக் மோசமானவன் என்ற விஷயம் மாயாவிற்கு தெரிந்து விட்டது. அதனால் எப்படியாவது கார்த்திக்கிடமிருந்து தனத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை தடுத்து நிறுத்த சில விஷயங்களை செய்தார். ஆனாலும் கார்த்திக், தனத்தை பற்றிய சீக்ரட்டான விஷயங்களை வீடியோ எடுத்து வைத்திருப்பதால் மாயவால் எந்த ஒரு விஷயத்தையும் வெளியே சொல்ல முடியவில்லை.

இருந்தாலும் தனத்தின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும், கார்த்திக் தாலி கட்டாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக மாயா அதிரடியாக ஒரு முடிவு எடுத்தார். அந்த வகையில் கதிரை வர சொல்லி கதிர் கையில் தாலியை கொடுத்து தனத்தின் கழுத்தில் கட்டி விடு என்று மாயா ஐடியா கொடுக்கிறார். அதன்படி மணமேடைக்கு வந்த கதிர், கார்த்திக் தாலி கட்டும் பொழுது அதை தட்டி விட்டு தனத்தின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார்.

இதை பார்த்த மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து கதிரை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ரகுராம் அடிக்கும் பொழுது சாருவின் அப்பா இதற்கு எல்லாம் காரணம் மாயா தான் என்று சொல்கிறார். அப்பொழுது அதை யாரும் நம்பாத பொழுது மாயா, கதிர் கையில் தாளிக் கொடுத்து கட்ட சொன்னதை வீடியோ எடுத்ததை காட்டுகிறார். பிறகு அனைவரும் மாயாவிடம் ஏன் இப்படி பண்ணினாய் என்று கேட்கிறார்கள்.

அத்துடன் தனமும் மாயாவை தவறாக புரிந்து கொண்டு என்னுடைய வாழ்க்கையை கெடுத்து விட்டாய் என்று கோபப்பட்டு சண்டை போடுகிறார். இதையெல்லாம் பார்த்த ரகுராம், நீ இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று உண்மையை சொல்லு என கேள்வி கேட்கிறார். உடனே கதிர், நான் சொல்கிறேன் என்று உண்மையை சொல்ல வரும்போது மாயா, கதிரை தடுத்து விடுகிறார்.

இதையெல்லாம் பார்த்த கார்த்திக், இந்த விஷயத்தை இப்படியே விட்டால் நாம் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக அங்கு இருப்பவர்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக கதிரை விளக்கு எடுத்து குத்துவதற்கு தயாராகி விட்டார். இதை பார்த்த சீனுவின் அப்பா கதிரை காப்பாற்றுவதற்காக குறுக்கே புகுந்து குத்துப்பட்டு விட்டார். அந்த வகையில் ஜோசியர் சொன்னபடி இந்த கல்யாணத்தில் ஒரு உயிர் போகும் என்ற அர்த்தத்தில் சீனுவின் அப்பா உயிர் பிரியப்போகிறது.

இவ்வளவு விஷயம் நடந்ததற்கு காரணம் மாயா மற்றும் கதிர் தான் என்ற காரணத்திற்காக மொத்த குடும்பமும் இவர்களை ஒதுக்கி வைக்கப் போகிறார்கள். அத்துடன் சீனுவும், மாயா வேண்டாம் என்று ஒதுக்க போகிறார். இதில் என்ன நடந்தாலும் மாயா உண்மையை சொல்லக்கூடாது என்ற பிடிவாதத்தில் இருப்பதால் யாருக்கும் இப்போதைக்கு உண்மை தெரிய போவதில்லை.

Trending News