வழக்கமாக நமக்கு தெரிந்திராத பல்வேறு விடயங்களை 90களில் வந்த படங்களின் பல்வேறு விளக்கங்களை எளிதாக வெளியில் பகிர்ந்து விடுபவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். சமீபத்திய சந்திப்பில் பல்வேறு விடயங்களை வெளிக்கொணர்ந்தார்.
சாதிய படங்கள் பற்றிய கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பல்வேறு பதில்களை தந்துள்ளார். நடிகர் நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படமான “சீவலப்பேரி பாண்டி” படத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெளியிட முடியவில்லை என்று கூறினார்.
மேலும் அப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்ததாகவும் குறிப்பிட்டார். அப்படியே கமல்ஹாசனின் “விருமாண்டி” படத்திற்கு சண்டியர் என பெயரிடப்பட்டு இருந்தது.
அந்த தலைப்பிற்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் ஆர்பாட்டங்கள் தென்மாவட்டங்களில் நடந்ததையும் கூறினார். அப்போது ஆட்சியில் இருந்த அம்மையார் ஜெயலலிதா தான் கமலஹாசனிடம் பேசி படத்தின் தலைப்பை மாற்றும் படி செய்தார் என்றும் கூறினார்.
இப்படியாக சாதிவாரியான பல்வேறு விடயங்களை கூறிய பயில்வான் தென்மாவட்டங்களில் வழக்கமாக நடக்கும் விழாக்களுக்கு என அவரவர் சாதியில் இருக்கும் பெரும் நடிகர்களை கொண்டாடுவது என இருந்ததையும் குறிப்பிட்டார்.
அந்த வகையில் நடிகர் சிவாஜி கனேசனை முக்குலத்தோர் கொண்டாடி வந்ததையும் பிறகு கார்த்திக்கை கொண்டாடியதையும் கூறினார். இன்னொரு தரப்புகளோ பிரசாந்தை கொண்டாடி வந்தார்கள் பிரசாந்தின் ரசிகர் மன்றங்களே சாதிய பெயர்களுடன் வலம் வந்தது என்றும் கூறினார்.
இதை எல்லாம் கடந்து நடிகர் சரத்குமார் தன்னை சாதியை கொண்டு எப்போதும் முன்வைத்து பேசியதல்ல இருந்தாலும் அவரால் தவிர்க்க முடியாத அளவில் சாதியினர் ஆதரவு வரத்தான் செய்கிறது என்றார்.
இப்படியாக சினிமாவில் சாதியை யாரும் பார்ப்பதில்லை கொண்டாடும் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதும் இல்லை என்று கூறினார்.