வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஒத்த ஆம்பளையா இருந்தா நேர்ல வாடா.. TTF-ஐ சண்டைக்கு அழைத்த கருஞ்சிறுத்தை

தன்னை மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து தூக்கியது துரோகம் என்று டிடிஎஃப் வாசன் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு மஞ்சள் வீரன் இயக்குநர் “நீ வேணா சண்டைக்கு வா டா” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, மஞ்சள் வீரன் இயக்குநர் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக டி டி எப் வாசன் பேசி இருந்தார். மஞ்சள் வீரன் திரைப்படத்தை பொறுத்த அளவுக்கு, ஒரே ஒரு போட்டோ ஷூட் மற்றும் பட பூஜை மட்டுமே நடந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும், நான் தான் பணத்தை செலவழித்தேன். அந்த பணம் கூட எனக்கு வேண்டாம்.

ஆனால் என்னை பற்றி ஏன் இப்படி தவறாக சித்தரிக்கிறீர்கள். வேறு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் என்னை கை கழுவி விட்டேர்களே, நல்லா இருப்பீர்கள். என்று தியாகியை போல பேசி இருந்தார் TTF வாசன். இந்த நிலையில், இயக்குனர் செல் அம்-மை சமீபத்தில் ஒரு போட்டியானது எடுக்க பட்டிருந்தது.

ஆம்பளையா இருந்தா நேர்ல வாடா

அந்த பேட்டியில், “டிடிஎஃப் வாசன், சரியான ஆம்பளையாக இருந்தால், இங்கிருக்கும் எல்லா பத்திரிக்கை முன்னரும் வரவேண்டும். என்னுடன் அவர் நேருக்கு நேராக அமர்ந்து பேட்டிக்கொடுக்க வேண்டும். அப்போது உண்மை தெரியும். போனில் பேசுவது, பின்னால் இருந்து ஒளிந்து கொண்டு பேசுவது, பாம்பேவில் இருந்து கொண்டு பேசுவதெல்லாம் என்னிடம் நடக்காது.

தைரியம் இருந்தால், நேரில் வா என்றைக்கு தேதி என்று சொல். அன்றைய தேதியில் நான் உன்னை நேருக்கு நேராக சந்திக்கிறேன்” என்று சவால் விட்டிருந்தார். இதற்க்கு TTF வாசன் நண்பர் பதிலடி கொடுத்தார். TTF வாசனுடன் படம் பண்ண போறேன் என்று சொன்ன பிறகு தான் நீங்கள் யார் என்று வெளி உலகத்துக்கே தெரியும்.

அவருடன் நேர்காணல் வேண்டும் என்கிறாரா? அவருடன் நேர்காணல் செய்து நாங்கள் என்ன சம்பதிக்கப்போகிறோம். அவர் கூறுவது அனைத்தும் பொய்” என்று கூறினார். இதை பார்க்கும் நெட்டிசன்கள், “அங்குட்டு போயி விளையாடுங்க பா..” என்று கலாய்த்து வருகின்றனர்.

Trending News