திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு முன்னாடி வேறு படம் எடுக்கும் செல்வராகவன், தனுஷ்.. வெளியான சூட்டிங் ஸ்பாட் போட்டோ

செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக தோல்வி அடைந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருவதால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக அறிவித்தனர்.

இந்த படத்தில் தனுஷ் நடிப்பதை ரசிகர்கள் வரவேற்றாலும் கார்த்தி மற்றும் ஜிவி பிரகாஷ் போன்றோர் இல்லாதது படத்திற்கு பெரும் பின்னடைவுதான் எனவும் கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் 2024 ஆம் ஆண்டுதான் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னரே கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம் செல்வராகவன்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மீண்டும் தன்னுடைய இயக்குனர் உலகத்தில் புகுந்து விட்டதாக சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் செல்வராகவன்.

மானிட்டரில் ஜீப் ஒன்று இருப்பதை போடவும், அதை செல்வராகவன் கவனித்துக் கொண்டிருப்பது போலவும் அந்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மேலும் இது ஒரு அதிரடி ஆக்சன் படம் எனவும் கூறுகின்றனர்.

selvaragavan-dhanush-new-movie
selvaragavan-dhanush-new-movie

என்னதான் செல்வராகவன் மற்ற நடிகர்களுடன் படம் செய்தாலும் தனுஷுடன் கூட்டணி சேரும் போது அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேறு லெவலில் இருக்கும் தான் உண்மையான விஷயம்.

அதிலும் முதல்முறையாக இருவரும் சேர்ந்து ஒரு ஆக்சன் அவதாரத்தில் களமிறங்க உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படம் 2022ஆம் ஆண்டு வெளியாக வாய்ப்பு இருக்கிறதாம்.

Trending News