தளபதி விஜயின் 65 வது படமான “பீஸ்ட்” எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது ஒரு இன்ப அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புடன் உருவாகும் படம் தான் பீஸ்ட். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் படம் என்றாலே வேற லெவல் தான்.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மலையாள நடிகையான அபர்ணா தாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இப்படத்தில் 3 வில்லன் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது வில்லனை அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஏற்கனவே வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இப்போது மற்றொரு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் அவர்களை அறிமுகப்படுத்தி உள்ளனர் படக்குழுவினர்.
காதல் கொண்டேன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். பின் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சாணிகாயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக களம் இறங்கியுள்ளார் செல்வராகவன்.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக மிரட்ட வருகிறார். செல்வராகவனை வில்லனாக திரையில் பார்க்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். அடுத்து மூன்றாவது வில்லனாக பாலிவுட்டில் இருந்து யாரேனும் வருவார்களா.? என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது.