வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

செம மேட்டர் இருக்கு.. செல்வராகவனுடன் மீண்டும் இணைந்த கீர்த்தி சுரேஷ்.!

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது ஹீரோவாக களமிறங்க உள்ளார்.

ஆரண்ய காண்டம் படத்தில் சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை வென்ற அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணிக்காயிதம் என்ற படத்தில் தான் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருடன் இப்படத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தாமதமானது. மேலும் இரண்டாம் ஊரடங்கு காரணமாகவும் ஷூட்டிங் பணிகள் தேக்கம் அடைந்தன.

தற்போது மாநில அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்களுக்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

எனவே நடிகை கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கி உள்ளதால், மீண்டும் சாணிக்காயிதம் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

saani kaayitham

Trending News