சங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களில் உதவி இயக்குனர்கள் முதல் இன்றைய அட்லீ வரையிலான உதவி இயக்குனர்கள் பலரும் முன்னணி நடிகர்களை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்க வருகின்றனர்.
ஆனால் நீண்ட நாட்களாக இயக்குனராக இருக்கும் செல்வராகவனின் பட்டறையிலிருந்து இதுவரை ஒருவர் கூட இயக்குனராக வந்ததில்லை. அதற்கு காரணம் செல்வராகவன் தன்னுடைய உதவி இயக்குனர்களுக்கு பெரும்பாலும் எதுவும் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார் என கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சுள்ளது.
இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இருந்தாலும் அவருடைய பட்டறையில் இருந்து தற்போது ஒரே ஒரு பெண் மட்டும் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். அவரது பெயர் லதா.
இவர் செல்வராகவன் மனைவி இயக்கிய மாலை நேரத்து மயக்கம், செல்வராகவன் சிம்பு கூட்டணியில் உருவாக இருந்த கான், செல்வராகவன் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் வரை அவருடன் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் லதா அடுத்ததாக யோகி பாபுவை வைத்து ஒரு கதையை படமாக எடுக்கவுள்ளாராம். மண்டேலா படத்திற்கு பிறகு யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் யோகி பாபுவுடன் யார், யார் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது. செல்வராகவன் பட்டறையிலிருந்து வந்த இவர் செல்வராகவன் ரேஞ்சிற்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.