வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

செல்வராகவனால் கிளம்பபோகும் புது பிரச்சனைகள்.. ஆரம்பித்த படமெல்லாம் அம்போன்னு நிக்குது

நிஜ வாழ்வில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல வித்தியாசமான காட்சிகளையும், காதல் கதைகளையும் எடுத்து அதில் வெற்றியும் கண்டவர் இயக்குனர் செல்வராகவன். இவரின் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது.

ஒரு சிறந்த இயக்குனராக நமக்கு அறிமுகமான இவர் தற்போது நடிப்பிலும் களமிறங்கியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இவர் நடித்துள்ளார். அந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்திலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளதால், விஜய்யின் ரசிகர்கள் மட்டுமின்றி செல்வராகவனின் ரசிகர்களும் இந்த படத்தை பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதுதவிர பல இயக்குனர்களும் செல்வராகவனை தங்கள் படத்தில் நடிக்க வைக்க பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளமாக வந்த வண்ணம் உள்ளது. இத்தகைய சூழலில் செல்வராகவன் ஒரு வித மன குழப்பத்தில் இருக்கிறார். அது என்னவென்றால் செல்வராகவன் தற்போது நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அதோடு அவர் தனுஷை வைத்து வரலாற்றுத் திரைப்படமான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படங்களை எடுத்து முடிப்பதற்கு நிறைய காலதாமதம் ஏற்படும்.

அப்படியிருக்கும்போது நடிப்பில் பிஸியாக இருக்கும் அவர் படம் இயக்குவது குறித்து பலத்த யோசனையில் இருக்கிறார். ஆனால் அவருக்கு நெருக்கமான சிலர் நடிப்பில் கவனத்தை செலுத்துங்கள் என்று கூறி வருகின்றனர். இருப்பினும் அவர் இந்த படங்களை இயக்கியப்படியே நடிப்பிலும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News