புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரு கையில் துண்டு பீடி, மறு கையில் துப்பாக்கி, ரத்த வெறியில் செல்வராகவன்.. மெர்சலாக்கும் சாணிக் காகிதம் ஃபர்ஸ்ட் லுக்

பல வருடங்களாக இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது சாணிக் காகிதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்த நிலையில் தற்போது சாணிக் காகிதம் படத்தில் படப்பிடிப்புகள் திண்டுக்கல் அருகே நடைபெற்று வருகிறது.

இன்று செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு சாணிக் காகிதம் படக்குழுவினர் செல்வராகவனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே செம வரவேற்பு பெற்றுள்ளது.

ஒரு கையில் துண்டு பீடி, மறு கையில் துப்பாக்கி, அறை முழுவதும் ரத்தம், கால்கள் கட்டியபடி ரத்த வெள்ளத்தில் மிதக்கும் பிணம் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படு பயங்கரமாக உள்ளது.

selvaragavan-saani-kaayidham
selvaragavan-saani-kaayidham

சாணிக் காகிதம் படத்தைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்கலாம் என செல்வராகவன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமில்லாமல் கடந்த நான்கு வருடமாக கிடப்பில் கிடந்த செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகி இன்னும் அவரது சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இதுவரை இல்லாத உற்சாகத்தில் உள்ளாராம் செல்வராகவன். அடுத்ததாக செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் தொடர்ந்து இரண்டு படங்கள் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News