திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நல்ல வேளை எக்ஸ் மனைவிய போடல, புது தெம்போடு களமிறங்கும் 7G செல்வராகவன்.. தகதகவென மின்னும் ஹீரோயின் புகைப்படம்

Selvaragavan: செல்வராகவன் இயக்கத்தில் கடந்த சில வருடங்களாகவே வெளிவரும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனால் நடிகராக களம் இறங்கிய இவர் நடிப்பில் மார்க் ஆண்டனி, டி50 உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது.

இந்நிலையில் அவர் மீண்டும் புது தெம்புடன் களமிறங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Also read: 7/ஜி ரெயின்போ காலனி-2 படப்பிடிப்பை ஆரம்பித்த செல்வராகவன்.. கதாநாயகி விஷயத்தில் சொதப்பிட்டாரே!

அதை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் செல்வராகவன் கடந்த சில மாதங்களாகவே தீவிரம் காட்டி வந்தார். அந்த வகையில் முதல் பாகத்தில் நடித்த ஜோடி தான் மீண்டும் நடிப்பார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சோனியா அகர்வால் ஹீரோயின் கிடையாது, அதிதி சங்கர் நடிக்க இருக்கிறார் என்ற பேச்சும் எழுந்தது.

இப்போது அவர்கள் இருவரும் கிடையாது, புது ஹீரோயின் தான் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. அந்த வகையில் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை அனஸ்வரா ராஜன் தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார்.

Also read: ஒரே படத்தால் ஃபேமஸான செல்வராகவன் பட ஹீரோ.. வாய்ப்புக்காக அலைந்து டிரைவராக சுற்றிவரும் பரிதாபம்

இவர் ஏற்கனவே தமிழில் திரிஷா நடிப்பில் வெளியான ராங்கி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து தற்போது அவர் செல்வராகவன் பட ஹீரோயின் ஆக மாறி இருக்கிறார். இதன் மூலம் கோலிவுட்டில் அவர் ஒரு ரவுண்டு வருவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார்.

தக தகவென மின்னும் செல்வராகவன் பட ஹீரோயின்

anaswara-rajan
anaswara-rajan

யுவன் சங்கர் ராஜா இசையில் அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் தன்னுடைய இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள செல்வராகவன் ஆர்வம் காட்டி வருகிறாராம். அந்த வகையில் நல்ல வேளை எக்ஸ் மனைவியை ஹீரோயினா போடல என்று அனஸ்வரா ராஜன் போட்டோவை பார்த்த ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர்.

Also read: சினேகாவையே கவர்ச்சி காட்ட வைத்த 5 இயக்குனர்கள்.. செல்வராகவன் கொடுத்த மோசமான கதாபாத்திரம்

Trending News