வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் வாய்ப்பு கேட்டேன்.. செல்வராகவனை ஏங்க விட்டு பார்க்கும் அசுரன்

சமீப காலமாகவே செல்வராகவன் இயக்குவதை காட்டிலும் நடிப்பின் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.  பீஸ்ட், சாணி காகிதம், பகாசூரன் போன்ற படங்களில் செல்வராகவனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் இப்போது அசுரனிடம் வெக்கமே இல்லாமல் வாய்ப்பு கேட்டிருப்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்திற்கு அடுத்ததாக அவர் தனது 50-வது படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். அதற்கான பூஜை ஈசிஆரில் சத்தமே இல்லாமல் நடத்தப்பட்டது. மேலும் படப்பிடிப்பிற்கான தீவிர ஏற்பாடுகளும் சென்னையில் இருக்கும் பிரபல ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

Also Read: இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும் 4 படங்கள்.. திரையரங்குகளில் சோடைப் போன பாட்ஷா

இந்நிலையில் படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்திப் கிஷான், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் என ஏகப்பட்ட பிரபலங்கள் இருக்கிறார்கள் என தெரியும். ஆனால் இந்த படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் பற்றி ஏற்கனவே நன்றாக தெரிந்தவர் தனுஷின் அண்ணன் செல்வராகவன். D50 படத்தை தனுஷ் துவங்கும் போதே கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அந்த ஒரு கேரக்டரில் மட்டும் நான் நடிக்கிறேன் என்று வாயைத் திறந்து நேரடியாகவே வாய்ப்பு கேட்டிருக்கிறாராம்.

இதை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வளர்த்துவிட்ட ஏணியவே இப்படியா ஏங்க விடுவது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். செல்வராகவன் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் தனுஷ் வளர்ந்தது போல, இப்போது வளர்ந்து ஆலமரமாய் நிற்கும் தனுஷின் இயக்கத்தில் செல்வராகவன் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காகவே D50 படத்தின் முழு அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.

Also Read: விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த 5 நடிகர்கள்.. கடைசியில் அண்ணன், சித்தப்பா கேரக்டர் தான் போல

மேலும் D50 படத்திற்கு ராயன் என்ற டைட்டிலையும் வைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்திற்காகவே தனுஷ் திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டு தன்னுடைய கெட்டப்பிற்கு ஏற்றவாறு மாறி இருக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இந்தப் படம் வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கக்கூடிய படமாக இருப்பதால் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆகையால் D50ல் தரமான சம்பவம் செய்யப்போகும் தனுஷ் உடன் செல்வராகவனும் இடம்பெற வேண்டும் என அவரைப் போலவே ரசிகர்களும் விரும்புகின்றனர்.

Also Read: திருமணம் ஆகியும் திருந்தாமல் இருந்த மருமகள்.. கடுப்பாகி திட்டிவிட்ட தனுஷின் அப்பா

Trending News