வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புது அவதாரம் எடுத்த செல்வராகவன்.. மொத்த கோடம்பாக்கத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்

காதலை வித்தியாச வித்தியாசமான கோணங்களில் காண்பிக்கும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்தது

அப்போதெல்லாம் செல்வராகவன் மிகவும் கண்டிப்பான மற்றும் டென்ஷனான ஆளாகவே படப்பிடிப்புத் தளத்தில் மிரட்டுவார். அவரது படத்தில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைக்கு கூட, பணி புரியும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும்  படப்பிடிப்பு தளம் என்று கூட பார்க்காமல் திட்டித் தீர்ப்பாராம்.

Also Read: ரசிகர்கள் கொண்டாட தவறிய படம்.. 2ஆம் பாகத்தை யோசிக்காத செல்வராகவன்

மேலும் அவர்களிடம் ரொம்பவே கண்டிப்பாகவும் வெறுப்புடனுமே நடந்துகொள்வார். ஆனால் சமீபகாலமாக இயக்குனர் செல்வராகவனின் குணநலன்கள் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது . தற்போது செல்வராகவன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டார்.

தளபதி விஜய்யுடன் பீஸ்ட், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணி காகிதம், அதைத்தொடர்ந்து தற்போது தம்பியுடன் இணைந்து நானே வருவேன் படத்தில் நடித்தும் இயக்கியும் உள்ளார். சமீபத்தில் வெளியான நானே வருவேன் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Also Read: மொத்தமாக சொரிஞ்சுவிட்ட செல்வராகவன், தோல்விக்கு இதான் காரணம்.. தனுஷ் ரசிகர்கள் கூட கொண்டாடாத நானே வருவேன்

இப்படி படங்களில் நடித்து நடிகராக மாறிய செல்வராகவன் தற்போது ரொம்பவும் ஜாலியான டைப் ஆக மாறிவிட்டார். இந்த மாற்றம் அவர் நடிக்க வந்த பிறகுதான் வந்திருக்கிறது. தற்போது புது மனிதனாய் மாறி இருக்கும் செல்வராகவனை பார்த்து கோடம்பாக்கம் சர்ப்ரைஸ் ஆகியுள்ளது. இனி செல்வராகவன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

நடிப்பதால் இயக்குவதை விற்றுவிடலாம் என செல்வராகவன் முடிவெடுத்தாலும், இவரது இயக்கத்தில் வெளியான படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருப்பதால் அவர்களை ஏங்கவிடாமல் அவ்வபோது ஒரு சில படங்களை இயக்கவும் முடிவெடுத்திருக்கிறார்.

Also Read: தமிழில் படம் இயக்க பிடிக்கவில்லை.. விரக்தியில் ஆவேசமாக பேசிய செல்வராகவன்

Trending News