வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

‘நானே வருவேன்’ படம் எப்படி இருக்கு? செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் வெளிவந்த ஃபர்ஸ்ட் ரிவ்யூ

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் செல்வராகவன், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சாணி காகிதம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் தளபதி விஜயின் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்படி சமீபகாலமாக இவர் இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் அதிக ஆர்வம் கட்டுவதால், அவருடைய ரசிகர்கள் இயக்குனர் செல்வராகவனை தான் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். இதற்காகத்தான் செல்வராகவன் தன்னுடைய தம்பி தனுசை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவர் இரட்டை வேடத்தில் நானே வருவேன் படத்தில் நடித்திருக்கும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைக்கு தயாராகியிருக்கும் இந்தப் படத்தை செல்வராகவன் முக்கியமானவர்களுக்கு போட்டு காட்டியுள்ளார். அதை பார்த்தவர்கள் மிரண்டு போயிருக்கின்றனர்.

அந்த அளவிற்கு செல்வராகவன் இந்தப் படத்தை பிரமாதமாக இயக்கி இருப்பதாக படத்தைப் பார்த்தவர்கள் உற்சாகத்துடன் கருத்து தெரிவித்திருக்கின்றனர். நானே வருவேன் திரைப்படம் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்பட பாணியில் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

செல்வராகவன்-தனுஷ் கூட்டணி மீண்டும் நானே வருவேன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டை ரணகளம் செய்ய காத்திருக்கின்றனர். ஏற்கனவே பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் தனுஷின் சமீபகால தமிழ் படங்கள் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், செல்வராகவன் இயக்கி இருக்கும் நானே வருவேன் திரைப்படம் தனுஷ் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு கிடைத்த விருந்தாக அமைய வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமின்றி இயக்குனர் செல்வராகவனுக்கு நானே வருவேன் திரைப்படம் நிச்சயம் நல்ல ஒரு கம்பேக் ஆக அமையும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து திரைக்கு காத்திருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழு வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Trending News