வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனுஷ் எவ்வளவோ சொல்லியும் கேட்காத செல்வராகவன்.. கடைசியில் அவமானப்பட்டது தான் மிச்சம்

தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் அவரது அண்ணன் செல்வராகவன் தான். அதாவது தனுஷை வைத்து பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இப்படி ஹிட் படங்களை கொடுத்து வந்த செல்வராகவன் சமீபகாலமாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார்.

இதற்கு மேலும் படங்களை இயக்க வேண்டாம் என்ற முடிவில் செல்வராகவன் நடிப்பில் இறங்கினார். அந்த வகையில் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காகிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருந்தார்.

Also Read : ரத்த சொந்தங்களை வெறுத்து ஒதுக்கும் தனுஷ்.. அதுக்குன்னு வளர்த்துவிட்டவரை அசிங்கப்படுத்துவதா

இப்போது மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பகாசூரன் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் படத்தில் பல பிற்போக்கு சிந்தனை, மூட நம்பிக்கை உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அப்போது படப்பிடிப்பில் தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இருவரும் செல்வராகவனை பற்றி பேசிக்கொண்டுள்ளனர். அதாவது சாணி காகிதம் படத்திலேயே பல விஷயங்களை செல்வராகவன் தனக்கு கற்றுக் கொடுத்துள்ளார் என்று இயக்குனர் தனுஷிடம் கூறியுள்ளார்.

Also Read : விஜய்யை ஓரங்கட்டி வெற்றி கண்ட தனுஷ்.. சைலன்ட்டாக காரியத்தை சாதித்த வாத்தி

அப்படிப்பட்டவர் பகாசூரன் படத்தில் ஏன் நடித்தார் என்று அருண் மாதேஸ்வரன் கேட்டுள்ளார். இதற்கு தனுஷ் ஆரம்பத்திலேயே இந்த படத்தில் நான் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினேன். இப்படி எவ்வளவோ சொல்லியும் என் பேச்சை மீறி தான் செல்வராகவன் அந்த படத்தில் நடித்தார். அதன் பிறகு நானும் கண்டு கொள்ளவில்லை.

இப்போது படம் வெளியான போது அவரே புரிந்து கொண்டிருப்பார் என்று தனுஷ் கூறினாராம். ஏனென்றால் மோகன் ஜி யின் கருத்துக்கள் எப்போதுமே மாறுபட்டதாக உள்ளது. சில ரசிகர்கள் இதை ஏற்றுக் கொண்டாலும் பெரும்பாலோனருக்கு இது முரண் ஆகத்தான் உள்ளது. மேலும் இதன் மூலம் செல்வராகவனின் கேரியரே கேள்விக்குறியாகி உள்ளது.

Also Read : ரிலீசுக்கு முன்பே கேப்டனுக்கு கொட்டும் பணமழை.. சிம்புவுக்கு பயத்தை காட்டிய தனுஷின் மில்லர்

Trending News