ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சுட்டு போட்டாலும் நடிக்கத் தெரியாத செல்வராகவன் பட ஹீரோ.. தங்கத் தட்டில் பிறந்ததால் கிடைத்த வாய்ப்பு

Director Selvaraghavan: செல்வராகவன் வித்தியாசமான கதைகளத்தை படமாக எடுக்கக் கூடியவர். தன்னுடைய தம்பி தனுஷை செல்வராகவன் தான் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு நிறைய படங்கள் தனுஷை வைத்து இயக்க இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக வளர்ந்து நிற்கிறார்.

இப்படி இருக்கும் சூழலில் செல்வராகவன் பட ஹீரோ ஒருவருக்கு சுட்டு போட்டாலும் நடிக்க தெரியாது என வெளிப்படையாக பேசி இருக்கிறார் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன். அதாவது செல்வராகவனுக்கு நிறைய படங்கள் ஹிட் கொடுத்தாலும் இப்போது வரை அவருடைய பெயர் சொன்னால் முதலில் ஞாபகம் வருவது 7ஜி ரெயின்போ காலனி தான்.

Also Read : ழைய செல்வராகவன் கதையை நோண்டி எடுத்த தனுஷ்.. அஜித் மறுத்ததால் 3 ஹீரோ சப்ஜெக்ட்க்கு தயாராகும் ஹீரோக்கள்

இந்த படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்த நிலையில் ஹீரோவாக ரவி கிருஷ்ணா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சுக்ரன், பொன்னியின் செல்வன் போன்ற சில படங்களில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு சினிமாவிலும் அவரைப் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் பயில்வான் சமீபத்தில் அவரைப் பற்றி கூறும் போது ரவி கிருஷ்ணாவுக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வராது என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பஞ்சத்துக்காக நடிகராக வந்தவர் ஆனால் அவருடைய அப்பா மிகப்பெரிய கோடீஸ்வரர்.

Also Read : தனுசுக்கு திறமையும் வளருது திமிரும் வளருது.. ஓவர் அடாவடியால் முகம் சுளித்த தங்கமான சீனியர் நடிகர்

ஆரம்பத்தில் கேமரா மேனாக பணியாற்றி அதன் பிறகு தயாரிப்பாளராக மாறிய ஏ எம் ரத்தினத்தின் மகன் தான் ரவி கிருஷ்ணா. ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் ரவி கிருஷ்ணா படங்களில் நடித்த நிலையில் எந்த படமும் போகவில்லை. இதனால் தனது தந்தை தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடித்த நிலையில் அதுவும் தோல்வி அடைந்தது.

தனக்கு முகபாவனை வரவில்லை ஏன் கஷ்டப்பட்ட நடிக்க வேண்டும் என்று ரவி கிருஷ்ணா தனது அப்பாவின் வருமானத்தில் கோடியில் புரளிகிறார் என பயில்வான் கூறியிருக்கிறார். மேலும் விரைவில் செல்வராகவன் 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தில் ரவி கிருஷ்ணா தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : 5 இயக்குனர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர்.. செல்வராகவன் படம் என்றாலே யுவன் இல்லாமல் எப்படி

Trending News