சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஹேப்பி அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. இதுவரை இல்லாத தனுஷை பார்க்க போகும் 2ம் பாகம்

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே எப்படி இதை எடுத்தார் என பிரமிக்கும் ரசிகர்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2வது பாகம் எப்போது உருவாகும் என கேள்வி எழுப்பி வரும் நிலையில் இது பற்றி செல்வராகவன் தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் ஆதர்சன இயக்குனர்

காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டதுடன் இளைஞர்களின் ஆதர்சன இயக்குனராக இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, எப்படி, அப்போதே இன்றைய காலத்திற்கு ஏற்ப கதை, திரைக்கதை அமைத்திருந்தார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்போது அவர் இயக்கிய படங்களில் சிலவை மட்டும் ரசிகர்களின் வரவேற்பை பெறாத படங்கள் கூட இப்போது ரசிகர்களால் பாராட்டப்பட்டு அது பற்றி சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் எப்போது அடுத்த படம் பற்றி அறிவிப்பை வெளியிடுவார் என கேட்டு வருகின்றனர்.

அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நெஞ்சம் மறப்பதில்லை. ஆனால், சமீப காலமாக படங்கள் எதுவும் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி இயக்கத்தை விட்டு நடிப்பிற்கு வந்தாலும் அதிலும் தனித்துவம் காட்டி, சிறந்த நடிகராக தன் முத்திரையை பதித்து வருகிறார் செல்வராகவன்.

நடிகராக அசத்தி வரும் செல்வராகவன்

அதன்படி, அவர் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காகிதம், விஜயுடன் இணைந்து பீஸ்ட், பகாசூரன், மார்க் ஆண்டனி, நானே வருவேன், ராயன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவர் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திரும் நிலையில் அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் பட 2 ஆம் பாகம் பற்றி செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன்

கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். ரவீந்திரன் தயாரிப்பில், ராம்ஜி ஒளிப்பதிவில், ஜிவி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்களால் கடுமையான விமர்சிக்கப்பட்டது. அதாவது, 12 ஆம் நூற்றாண்டு சோழ பின்னணியைக் கொண்டு இயக்கப்பட்ட இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை செல்வராகவனின் முயற்சியை பலரும் பாராட்டினர். ஆனால் போதிய வெற்றியைப் பெறவில்லை.

ஆயிரத்தில் ஒருவன் 2

ஆனால் பல ஆண்டுகள் கடந்து இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் இப்படத்தின் 2 வது பாகம் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் 2 ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளியானது.

இதில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், இப்படம் செல்வராகவனின் கனவு, நீண்ட நாட்கள் இதற்குக் காத்திருக்கிரோம். இளவரசன் மீண்டும் வருவான் 2020ல் என்று தெரிவித்திருந்தார். இப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், செல்வராகவன் மற்றூம் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை செல்வராகவன் தன் இன்ஸ்டாவில் நியூ பிகின்னிங் என்று தெரிவித்துள்ளார்.

எனவே மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்கு பின் இக்கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாகவும், அப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அறிவிப்பின்படி இப்படம் ஆயிரத்தில் ஒருவன் 2 வது பாகமாக இருக்கலாம் என தகவல் வெளியாகின்றது.

இயக்குனராக இருந்து நடிகராக ஜொலித்து வரும் செல்வராகவன் விரைவில் ஆயிரத்தில் ஒருவன் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீண்டும் அவர் இயக்குனராகி முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News