சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

போட்ட எல்லா பிளானும் வீணா போச்சு.. 3 படங்களை நம்பி காத்திருக்கும் செல்வராகவன்

Director Selvaraghavan: செல்வராகவன் எல்லா பக்கமும் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். போட்ட பிளான் எல்லாம் வீணா போன நிலையில் தற்போது அவர் மூன்று படங்களை மட்டுமே நம்பி உள்ளார்.

ஆரம்பத்தில் இவருடைய படங்களை இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஒரு புது ட்ரெண்டை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

ஆனால் சமீப காலமாக இவர் இயக்கிய படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனாலேயே நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார். ஆனால் அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

மேலும் இவர் இயக்கும் படத்தை தயாரிக்க யாரும் முன் வரவில்லை. இதனால் சோர்ந்து போன அவர் தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தை நம்பியுள்ளார்.

3 படங்களை நம்பி இருக்கும் செல்வராகவன்

இதன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று கொண்டாடப்பட்டது. அதேபோல் இப்படமும் வெற்றி பெற்று விட்டால் அடுத்த பிளானை இறக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அதாவது புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது வரும் என ரசிகர்கள் கேள்வி கேட்ட வண்ணம் உள்ளனர். செல்வராகவனுக்கும் இந்த எண்ணம் சில வருடங்களாகவே இருக்கிறது.

ஆனால் 7ஜி ரெயின்போ காலனி 2 ஹிட் ஆனால் மட்டுமே இது சாத்தியமாகும். அதனாலேயே தற்போது படத்தை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறாராம். இது அவருக்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News