Selvaraghavan: 2K கிட்ஸ்களுக்கு செல்வராகவன் எப்படிப்பட்ட இயக்குனர் என்றெல்லாம் நம்மால் கணிக்க முடியாது. ஆனால் 90ஸ் கிட்ஸ்களை பொறுத்த வரைக்கும் சக்கரகட்டி போல் படங்களை கொடுத்தவர்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என செல்வராகவனின் படைப்புகள் அப்போது பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் அவருடைய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களில் ஏதாவது ஒன்று இரண்டாம் பாகமாக உருவாக வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையும்.
மரண வெயிட்டிங்கில் 90ஸ் கிட்சுகள்
ஆனால் யாருமே எதிர்பார்க்காத ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி பேச்சுக்கள் வெளியானது.
செல்வராகவனின் திரைக்கதை மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.
இன்று வரை 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படமாக இது இருக்கிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
அதன் பின்னர் வேலைகள் எல்லாம் டிராப் ஆகிவிட்டது 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2 எல்லாம் கிடையாது என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் சத்தமே இல்லாமல் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய டிரேட் மார்க் படைப்பான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார்.
படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடந்து கொண்டு இருப்பதாக இன்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அத்தோடு இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக நியூ இயர் ட்ரீட் அறிவிப்பாகவும் இது வெளியாகி இருக்கிறது.