திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முதல் காதலை நினைத்து உருகும் செல்வராகவன்.. தனுஷை தொடர்ந்து நடக்க போகும் விவாகரத்து

செல்வராகவனுக்கு என்ன தான் ஆச்சு என்று கேட்கும் அளவுக்கு சமீப காலமாக பல சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் அவருடைய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு இப்போது கிடைக்கவில்லை. அதனாலேயே அவர் நடிப்பு பக்கம் தன் கவனத்தை திருப்பினார். அதுவும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த பகாசூரன் திரைப்படம் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதனால் அவர் இப்போது கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதற்கு முன்பே நானே வருவேன் திரைப்படத்திற்கு கிடைத்த விமர்சனங்களும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

Also read: கல்லா கட்ட பலே திட்டம் போட்ட தனுஷ்.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி

அதன் விளைவாகவே அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது குழப்பமான சில கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அதிலும் அவர் போட்ட ஒரு பதிவு அவருக்கு விரைவில் விவாகரத்து நடக்கப் போகிறது என்ற ரீதியில் பெரும் விவாதத்தையே கிளப்பியது. ஆனால் அதில் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் செல்வராகவன் இப்போது முதல் காதலை நினைத்து உருகியபடி ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ, நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது, அது வாழ்க்கையில் ஒரு நிமிடம் தான் என்பதை கடவுளும் நம்மிடம் சொல்லவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Also read: ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் தனுஷ், ஐஸ்வர்யா.. கரும்பு மிஷினில் மாட்டிய கதையான நடிகரின் நிலை

இதைப் பார்த்த பலரும் செல்வராகவன் விவாகரத்துக்கு தயாராகி விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட இவர் சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்தார். தற்போது இந்த திருமணமும் அவருக்கு கசந்து போய் இருக்கிறது.

அதனால் தான் அவர் இப்படி எல்லாம் பதிவுகளை போட்டு வருவதாகவும் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. மேலும் அவர் முதல் காதல் என்று குறிப்பிட்டது தன்னுடைய முதல் திருமணம் பற்றியா என்றும் ரசிகர்கள் சந்தேகத்தோடு கேட்டு வருகின்றனர். ஏற்கனவே அவருடைய குடும்பத்தில் தனுஷ் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோன்று செல்வராகவனும் விவாகரத்து அறிவிப்பை வெளியிடுவார் என்ற ஒரு தகவல் காட்டு தீ போல் இப்போது பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: மூன்றே மாதத்தில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட வெற்றிமாறன்

Trending News