வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சோனியா அகர்வாலை கடுமையாக திட்டிய செல்வராகவன்.. சமாதானம் செய்த பிரபலம்

தமிழ் சினிமா செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் மூலம் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். அதன் பிறகு செல்வராகவன் படங்களில் தொடர்ந்து வரிசையாக நடிக்க ஆரம்பித்தார்.

பின்பு இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நிலைக்க வில்லை. சீக்கிரமே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு செல்வராகவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை குட்டி என சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இன்னிலையில் சமீபத்தில் சோனியா அகர்வால் செல்வராகவன் பற்றி பேசினார். செல்வராகவன், நடிப்பில் எனக்கும் தனுஷுக்கும் குரு. ரொம்ப கடுமையான குருவும் கூட. ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் மூலம் தான் சினிமா பயணமே துவங்கியது.

அப்போது என்னுடைய அம்மா தனுஷை பார்த்து இவர்தான் ஹீரோவா! நாம் சரியாகத்தான் படத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோமா! என கேட்டார். அதற்கு நான், சில படங்களின் கதாபாத்திரங்கள் கதைக்கு ஏற்றவாறு இப்படித்தான் இருக்கும் என சமாதானம் செய்தேன்.

செல்வராகவன் சார், அழுத்தம் காரணமாக சில நேரங்களில் என்னை சத்தமாக திட்டி விடுவார். அப்போது தனுஷ் தான் என்னை சமாதானம் செய்வார். மேலும் அவ்வப்போது சண்டைகள் வந்தால்கூட தனுஷ், வேலையின் காரணமாக தான் அவர் திட்டுகிறார்.

நீங்கள் எதுவும் கவலைப்படாதீர்கள் என கூறினார். அந்த அளவிற்கு செல்வராகவன் தன்னுடைய படத்தில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பை வாங்குவார் என செல்வராகவனை குறித்து சோனியா அகர்வால் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Trending News