தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பல இயக்குனர்கள் படப்பிடிப்பு தளத்தில் சற்று கடுமையாகவே நடந்து கொள்வார்கள். அந்த வரிசையில் செல்வராகவனுக்கும் ஒரு இடம் உண்டு.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கோபப்பட கூடிய இயக்குனர்கள் என்றால் பாலா மற்றும் கே.எஸ் ரவிக்குமார் என்றுதான் தெரியும். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் மிக கடுமையாகவும், கோபமாக இருக்கக் கூடியவர்தான் செல்வராகவன் என சமீபத்திய பேட்டியில் சுதா கூறியுள்ளார்.
நடிகை சுதா பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் ரவி கிருஷ்ணாவுக்கு அம்மாவாக நடித்து இருப்பார். இவர் தமிழை தாண்டியும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.
ஒரு முறை சூட்டிங் ஸ்பாட்டில் சுதாவை மிக இழிவாக பேசியுள்ளார் செல்வராகவன். இதனால் சுதா செல்வராகவனை பார்த்து ‘செல்வராகவன் படம் என்று நான் நடிக்க வரவில்லை மரியாதையாக பேசுங்கள்’ என்று கூறிவிட்டு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
இதனால் செல்வராகவன் இவர் நடித்த அந்த குணசித்ர கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகையை வைத்து நடிக்க வைத்துள்ளார். ஆனால் சுதா நடித்த அளவிற்கு அந்த துணை நடிகையால் நடிக்க முடியவில்லை.
பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் செல்வராகவன் எலி போல் ஓடிப்போய் சுதாவிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அதாவது நான் தெரியாம உங்களுக்கு மரியாதை தராமல் பேசிவிட்டேன் இதனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும்.
மீண்டும் என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறியதாகவும் சுதா கூறியுள்ளார். அதன் பிறகுதான் செல்வராகவன் படத்தில் நடித்ததாகவும் டப்பிங் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.