வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பழைய செல்வராகவன் கதையை நோண்டி எடுத்த தனுஷ்.. அஜித் மறுத்ததால் 3 ஹீரோ சப்ஜெக்ட்க்கு தயாராகும் ஹீரோக்கள்

Actor Ajith: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் ஒரே படத்தில் இணைவது இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. ஆனால் ரஜினியை போல் இப்போது அஜித்தும் தன்னுடைய படங்களில் வேறு எந்த டாப் ஹீரோக்களையும் நடிக்க கூடாது என அடம் பிடிக்கின்றனர்.  அதிலும் மூன்று ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கவே முடியாது என அஜித் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

அதில் ஒரு ஹீரோவாக நடிக்க இருக்கும் தனுஷ் இப்போது அந்த பழைய கதையை நோண்டி இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் படம்வெளியானது. இந்த படம் எடுப்பதற்கு முன்னரே, 3 ஹீரோ சப்ஜெக்ட் கதையை அஜித்துக்கு கதை சொல்லி இருக்கிறார் செல்வராகவன்.

Also Read: தனுசுக்கு திறமையும் வளருது திமிரும் வளருது.. ஓவர் அடாவடியால் முகம் சுளித்த தங்கமான சீனியர் நடிகர்

இரண்டாம் உலகம் படம் பிளாப் ஆனவுடன் அந்த பேச்சை நிறுத்திவிட்டனர். ஆனால் அது செம கதையாம், இந்த கதையில் மூன்று ஹீரோக்களுக்காக எழுதிய ஸ்டோரி. அஜித் குமார், தனுஷ் மற்றும் பரத் ஆகிய மூன்று ஹீரோக்களை மனதில் வைத்து தான் செல்வராகவன் இந்த படத்தின் கதையை உருவாக்கினாராம்.

இந்த படம் மட்டும் உருவாகி இருந்தால் நிச்சயம் வேற லெவலுக்கு ஹிட் கொடுத்திருக்கும். ஏனென்றால் தனுஷ் மற்றும் அஜித் ரசிகர்கள் இருவரும் சேர்ந்து இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்திருப்பார்கள். ஆனால் அதன் பின் அஜித் அதை மறுத்துவிட்டார்.

Also Read: ஜெயிலர் பட நடிகரை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய தனுஷ்.. மாமனாரை பழிவாங்க இப்படியும் செய்யலாம்.!

இப்பொழுது அந்த கதையை எடுக்கலாம் என்று அண்ணனுக்கு தம்பி தனுஷ் ஐடியா கொடுத்து இருக்கிறார். பரத்தும் தனுசும் நடிக்க போவது உறுதி. ஆனால் அஜித்துக்கு பதில் வேறு ஒரு நடிகரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். தனுஷ் தான் செல்வராகவனை இந்த விஷயத்தில் தூண்டிவிட்டு இருக்கிறார்.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பின் அவருடைய இயக்கத்தில் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு பிறகு செல்வராகவனின் 3 ஹீரோ சப்ஜெக்ட் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

Also Read: புள்ள பூச்சிக்கு கொடுக்கு முளைத்து, 2 ஆம் பாகத்துக்கு ஹீரோயின் ஆன கதை.. அக்கட தேச குழந்தையை கூட்டி வந்த செல்வராகவன்

Trending News