ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிங்க பெண்ணை கல்யாணம் கட்டிக்க ஆசைப்பட்ட ரசிகர்.. நேரம் பார்த்து மூக்கை உடைத்த ஜெயலலிதா

Selvi J. Jayalalithaa replied his fan: “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்ற வாசகம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் முழங்கச் செய்தவர் முன்னாள் முதல்வர் திரு ஜெயலலிதா அம்மா அவர்கள். தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணியாக வலம் வந்த இவரின் வாழ்க்கை பல திருப்பங்கள் நிறைந்தது.

குழந்தை நட்சத்திரமாக கன்னட சினிமாவில் அறிமுகமாகி தமிழில் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் செல்வி ஜெயலலிதா அவர்கள். தமிழ் சினிமாவை ஆண்ட ஜாம்பவான்களின் விருப்பத்திற்குரிய நட்சத்திரமாக விளங்கிய திரு ஜெயலலிதா அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பலமொழிகளிலும் நடித்து உள்ளார். தமிழை தாண்டி பலமொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் உண்டு.

தனது தேர்ந்த நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு வைக்கும் இவருக்கு உயிரை கொடுக்கும் அளவுக்கு ரசிகர் ஒருவர் இருந்துள்ளார். அந்த ரசிகர், “மணந்தால் உங்களை மட்டும் தான்  மணப்பேண் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன்” என்று   தற்கொலை மிரட்டல் விடும் அளவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Also read: விஜயகாந்துக்கே அப்பன் நான்.. ஜெயலலிதா முன் சொடுக்கு போட்டு பேசிய ரஜினியின் தைரியம்

ரசிகர்கள் அன்பின் மிகுதியால் இவ்வாறு கடிதம் எழுதுவது இயல்பு தானே என்று திரு ஜெயலலிதா அவர்கள் இதனை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார். விடுவாரா ரசிகர், திரும்பவும் அதே பாணியில் மீண்டும் அதே வசனத்தில் தேதியை மாற்றி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இந்த முறை தனது சமயோசித புத்தி கூர்மையால் அந்த ரசிகருக்கு பதில் கடிதம் எழுதினார் திரு. ஜெயலலிதா அவர்கள்.

எனக்கு கணவராக வருபவர், தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராக இருக்க வேண்டும். நீங்கள் வாக்கு தவறி விட்டீர்கள் அதனால் எனக்கு கணவராகும் தகுதி இல்லை என்று கூறியுள்ளார். இதற்குப் பின் அந்த ரசிகரிடம் இருந்து கடிதம் வரவே இல்லை. இந்நிகழ்வினை அப்போது இருந்த செய்தியாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.

“நிழல் வேறு! நிஜம் வேறு!” என்பதை உணராத ரசிகர்கள் சிலர்  இப்படியான வேடிக்கையான விஷயங்களில் ஈடுபடுவதை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். சினிமாவில் படத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டால் அனைவருக்கும் நலமே.

Also read: சிவாஜி விழாவில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி

Trending News