புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜீ தமிழ் சீரியல் ஹீரோவை பிக்பாஸில் களமிறங்கும் விஜய் டிவி.. ஆம்பள அர்ச்சனா என கலாய்க்கும் ரசிகர்கள்

தற்போது சினிமா மற்றும் சீரியல் விஷயங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விட்டதால் அடுத்தடுத்து தொலைக்காட்சிகள் தங்களுடைய புதிய நிகழ்ச்சிகளை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்த விஜய் டிவி தற்போது 5வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார். மேலும் இந்த சீசனுக்கான ஆட்களை தேர்வு செய்ததில் விஜய் டிவி நிர்வாகம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

அதற்கு காரணம் போன பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரிவர ஆட்கள் தேர்வு செய்ய முடியாததால் டிஆர்பி-யில் படுசரிவை சந்தித்து விட்டதாம். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி எடுக்கும்போதே விஜய் டிவி வட்டாரங்களுக்கு பிடிக்கவில்லையாம்.

இருந்தாலும் தலையெழுத்தே என எடிட் செய்து போட்டுள்ளனர். இதனால் அடுத்த சீசனில் கவனமாக ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சீசனில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து அர்ச்சனாவை கூட்டிவந்ததைப் போல இந்த முறை செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் ராஜா என்பவரை களமிறக்கவுள்ளதாம் விஜய் டிவி.

இவருக்கும் ஜீ தமிழ் நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையை பயன்படுத்தி அவரை களமிறக்க உள்ளதாம். கார்த்திக் ராஜா சமீபத்தில் கிரவுட் ஃபண்டிங் முறையில் படமெடுக்க ஆசைப்படுவதாக ரசிகர்களிடம் பணம் கேட்டு வந்தார் என்பதும் கூடுதல் தகவல்.

sembaruthi-fame-karthik
sembaruthi-fame-karthik

Trending News