திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முகத்தில் மிளகாய் பூசி பரிகாரம் செய்த பார்வதி புகைப்படம்.. விட்டா ஆசிட்டை குடிப்பாங்க போல

தற்போது ஜீ தமிழ் டிவியின் திருமண வைபவங்கள் அண்மையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அனைத்து நாடகங்களும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் செம்பருத்தி சீரியலில் மாமியாருக்காக கடுமையான பரிகாரம் பார்வதி செய்துள்ளார்.

ஏற்கனவே பலவிதமான பரிகாரங்களை பட்டியலிட்ட நாடகம் செம்பருத்தி. தற்போது அகிலாண்டேஸ்வரிக்கு நவகிரக தோஷம் ஏற்பட்டுள்ளதாக குருஜி கூறியிருக்கிறார். அத்துடன் இன்னும் சில காலத்திற்கு பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட கதாநாயகி உடனடியாக கோயிலுக்கு சென்று அம்மனிடம் முறையிட்டுள்ளார். பொதுவாக கதாநாயகி கோயிலில் முறையிடும் போது, தெய்வம் மனித உருவில் யாரையாவது அனுப்பி கதாநாயகியின் சந்தேகத்தை தீர்ப்பது போன்ற பல்வேறு காட்சிகள் செம்பருத்தியில் இடம்பெறுவது வழக்கம்.

ஆனால் தற்போது அப்படி யாரும் வந்து தனது சந்தேகத்தை தீர்க்கததால் கோபமடைந்த பார்வதி, அருகில் கூடை கூடையாக வைக்கப்பட்டுள்ள வரமிளகாயை எடுத்து, அம்மியில் வைத்து அரைத்து தனது உடம்பில் பூசிக் கொண்டு அம்மனிடம் முறையிடுகிறாள். இறுதியாக தனது கண்களில் பூச முயலும்போது திருப்பம் ஏற்படுகிறது.

parvathy-cinemapettai8
parvathy-cinemapettai8

தமிழ் சீரியல் வரலாற்றில் இப்படி ஒரு பரிகாரத்தை எந்த கதாநாயகியும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கதாநாயகி பார்வதி, மாமியாருக்காக இப்படி ஒரு பரிகாரம் செய்வது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் நெட்டிசன்கள் தரப்பில் இதுபோன்ற முட்டாள் காட்சிகள் தேவையா என்றும் மாமியார் மீது உள்ள மரியாதையையும், பாசத்தையும் இப்படித்தான் வெளிக்காட்ட வேண்டுமா என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதன் மூலமாவது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று செம்பருத்தி குழு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News