புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சேப்பாக்கத்தில் நாங்க தான் கிங், ஜடேஜா, அஸ்வின் கொடுத்த மரண அடி.. வங்கப் புலிகளை வேட்டையாடிய இந்திய அணி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் காலை தொடங்கியது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆரம்பத்தில் மைதானம் வேகப்பந்து வீசக்கூடிய பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. இந்தியாவை, மைதானம் தன்மை மாறுவதற்குள் சுருட்டி விடலாம் என கணக்கு போட்டு வங்கப் புலிகள் களமிறங்கியது. அவர்கள் எதிர்பார்த்தபடியே முதல் மூன்று விக்கெட்டுகள், சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தது.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஆறு ரன்களுக்கு நடையை கட்டினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருங்கால தூண் சுபம் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஃபெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 34 ரன்களுக்கு மூன்று பெரிய விக்கெடுகளை இழந்தது.

வங்கப் புலிகளை வேட்டையாடிய இந்திய அணி

பெரிதும் ஆரவாரமாய் களத்தில் காணப்பட்ட பங்களாதேஷ் அணியினரின் கைகளே முதல் செசனில் ஓங்கி இருந்தது. பின்னர் இளம் வீரர் எஸ் எஸ் வி ஜெய்ஷ்வாலுடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

உணவு இடைவெளி வரை தாக்குப்பிடித்த இந்த பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோர் 96 இருக்கும்பொழுது அதிரடி வீரர் பந்த் விக்கெட்டை இழந்தது. பின்னர் இறங்கிய ராகுல் 16 ரன்களிலும் , எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால் 56 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

144 ரண்களுக்குள் 6 விக்கெட்டை இழந்த இந்திய அணிக்கு ஆபத்பாண்டவனாய் வந்த சீனியர் வீரர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் ஜோடி மீட்டெடுத்தனர். அஸ்வின் தனது ஹோம் கிரவுண்டான இங்கே 102 ரன்கள் குவித்தார். அவரைப் போல ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 339 ரண்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் உள்ளது.

Trending News