வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வைல்டு கார்டு Vs சீனியர் போட்டியாளர்கள்.. புது வரவுகளால் சூடு பிடிக்கும் பிக்பாஸ் களம்

Biggboss 8: பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நுழைந்து சீனியர்களை மண்டை காய வைத்துள்ளனர். வெளியில் பார்த்த காட்சிகள், விமர்சனங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக புட்டு புட்டு வைத்து அனைவரின் எனர்ஜியையும் குறைத்து வருகின்றனர்.

இதனால் சீனியர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்கின்றனர். இதை எதிர்பார்த்த பிக்பாஸ் தற்போது ஒரு டாஸ்க்கை கொடுத்து வீட்டை கலவரப்படுத்தி இருக்கிறார்.

அதாவது எந்த இரண்டு போட்டியாளர்கள் மற்றவர்களை manipulate செய்கிறார்கள் என சொல்ல வேண்டும். இதில் பெரும்பாலானோர் மஞ்சரி, வர்ஷினி ஆகியோரின் பெயரை தான் கூறினார்கள்.

முதல் ப்ரோமோ இப்படி வெளியாகி இருந்த நிலையில் அடுத்த புரோமோவும் வெளியாகி இருக்கிறது. அதில் சீனியர் போட்டியாளர்களில் ஆண் பெண் இரு அணிகளும் தங்களுக்குள் புதுவரவுகளை பற்றி புறணி பேசிக்கொள்கின்றனர்.

சூடு பிடிக்கும் பிக் பாஸ் ஆட்டம்

ஓவர் கான்ஃபிடன்ஸ், ஜால்ரா, எல்லாத்தையும் வெளிய பாத்துட்டு வந்து இங்க நெகட்டிவ் பேர் வாங்குறாங்க. இதுக்கு எதுக்கு பிக் பாஸ் வீட்டுக்கு வரணும் என்பது போல கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதிலிருந்து புது போட்டியாளர்களை சீனியர்கள் விரும்பவில்லை என வெளிப்படையாக தெரிகிறது. முதல் நாளிலேயே இப்படி ஒரு முக பாவனையில் தான் ஹவுஸ் மேட்ஸ் இருந்தனர்.

அதை கொஞ்சம் அடக்கி வாசித்த நிலையில் இன்று பூதாகரமாக வெடிக்கும் என தெரிகிறது. எது எப்படியோ பிக் பாஸ் எதிர்பார்த்த சம்பவமும் இதுதான். தற்போது களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஆட்டம் மாறுமா இல்லை நமத்து போகுமா என்பதை பார்ப்போம்.

Trending News