செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

எனக்கு அந்த கொழுக் மொழுக் ஹீரோயின்தான் வேணும்.. ஹரியிடம் அடம்பிடித்த அருண் விஜய்

ஒரு காலத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து தடுமாறிக் கொண்டிருந்த அருண்விஜய் சமீப காலமாக தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதற்கு காரணம் தல அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம்தான்.

வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிறிய பட்ஜெட்டில் ஹீரோவாக சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே லாபங்களை கொடுத்து வந்ததால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறிவிட்டார் அருண் விஜய்.

அதுவும் அருண் விஜய் மகிழ் திருமேனி கூட்டணியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு அப்படியே இருந்து வருகிறது. தற்போது அருண் விஜய் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்து தன்னுடைய மாமாவும் இயக்குனருமான ஹரியுடன் இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் கூட சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ஹரி அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். கிராமத்து கதையில் உருவாகும் திரைப்படத்திற்கு பிரியா பவானி சங்கர் பொருத்தமாக இருப்பார் என அருண்விஜய் சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் ஏற்கனவே மாபியா என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகும் பல படங்களில் ஹீரோயின் ப்ரியா பவானி சங்கர் தான். அப்படி அந்த பொண்ணுகிட்ட என்ன தான் இருக்குதோ என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்களாம்.

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai

ஹரி படங்களில் கண்டிப்பாக ஒரு கிளாமர் பாட்டு இருக்கும். அதில் எப்படி பிரியா பவானி சங்கர் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில்.

Advertisement Amazon Prime Banner

Trending News