சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வடசென்னையை தொடர்ந்து விடுதலை படத்திற்கும் செக் வைத்த சென்சார் போர்டு.. முகம் சுளிக்க செய்த வெற்றிமாறன்

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் விடுதலை. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர் சூரி முதன் முதலாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இதில் சூரியை ஆக்சன் ஹீரோவாக பார்த்த ரசிகர்கள், முழு படத்தையும் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: சூரிக்கு குவியும் அடுத்தடுத்த வாய்ப்புகள்.. மறைமுகமாக உதவும் தம்பி

இப்போது விடுதலை படத்தைப் பார்த்த தணிக்கை குழு படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், வடசென்னை போன்ற படங்களை தொடர்ந்து தற்போது விடுதலை படத்திற்கும் ஏ சான்றிதழ் கொடுத்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏனென்றால் விடுதலை படத்தில் ட்ரைலரிலேயே ஒரு காட்சியில் விஜய் சேதுபதியை பிடித்து சென்ற போலீசார் அந்த ஊர் மக்களை அடித்து துன்புறுத்துகின்றனர். அதுமட்டுமல்ல பெண்களின் ஆடைகளை கழற்றி அத்து மீறிய காட்சியும் இடம்பெற்றது.

Also Read: வடசென்னை காம்போவில் உருவாகும் வெப் சீரிஸ்.. சம்பவம் செய்ய போகும் வெற்றிமாறன்

முகம் சுளிக்க வைத்த இந்த ஒரு காட்சியை மட்டும் வெற்றிமாறன் நீக்கி இருந்தால் சென்சார் போர்ட் ஏ சான்றிதழை கொடுத்திருக்காது. ஆனால் இந்த காட்சியை கண்டிப்பாக வைத்தே ஆக வேண்டும் என அடம் பிடித்ததால் தணிக்கை குழு விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழை அதிரடியாக வழங்கியுள்ளது.

மேலும் சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆகுவதை தொடர்ந்து, 31ம் தேதி விடுதலை படம் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

Also Read: இதுவரை பட்ட அவமானங்களை சவாலாக மாற்றிய சூரி.. மனைவியவே வியக்க வைத்த செயல்

Trending News