வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எல்லாத்தையும் பணமாகவே பார்க்கும் செந்தில் ராஜலட்சுமி.. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல் பாடி மக்கள் மத்தியில் பிரபலமான ஜோடி செந்தில், ராஜலட்சுமி. மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றியாளரான இவர்கள் தற்போது வெள்ளித்திரையிலும் பாடல்களை பாடி வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சி நடத்த ராஜலட்சுமி மற்றும் செந்தில் ஜோடிக்கு நிறைய அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் செந்தில் கணேஷ் ஹீரோவாகவும் ஒரு படத்தில் களம் இறங்கி இருந்தார்.

Also Read : டிஆர்பிக்காக தரமான ஆளை இறக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 வையல் கார்ட் என்ட்ரி

அந்தப் படம் சரியாக போகவில்லை. இப்போது செந்திலுக்கு போட்டியாக ராஜலட்சுமி படத்தில் நடித்து வருகிறார். அதாவது சைலன்ஸ் என்ற படத்தில் ராஜலட்சுமி நடிக்கிறாராம். இந்நிலையில் தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் பிரம்மாண்டமாக இந்த தம்பதியினர் வீடு கட்டி உள்ளனர்.

அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வெள்ளி திரையில் சம்பாதித்தது பத்தாது என்று யூடியூப் தொடங்கி அதன் மூலமும் இந்த ஜோடி வருவாய் பார்த்து வருகிறது.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 கடைசி 5 பைனலிஸ்ட் இவர்கள் தான்.. இப்பவும் தில்லாலங்கடி வேலையை கையாளும் விஜய் டிவி

மேலும் முகநூலில் இவர்கள் ஸ்டார்களை அனுப்பவும் வசதிகளை வைத்து இருப்பதால் இவர்களுக்கு பல பேர் பணம் அனுப்புகிறார்கள். இப்படி தொடர்ந்து செந்தில் ராஜலட்சுமி வாழ்க்கை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவும் பத்தாது என்று தற்போது புதிதாக ஒன்று தொடங்கி உள்ளனர்.

அதாவது ராஜலட்சுமி தனது மாமியாருக்கு வேறு ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறார்களாம். இப்படி எங்கு பார்த்தாலும் பணம், பணம் என்று அழைக்கிறார்கள் என கண்டபடி ரசிகர்கள் இவர்களை திட்டி வருகிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் என்பது போல, பணத்தால் சில பிரச்சனையும் சந்திக்க கூடும் என பலர் கூறுகிறார்கள்.

Also Read : விஜய் டிவியால் சாவின் விளிம்பிற்கு செல்லும் காமெடி நடிகர்கள்.. செஞ்சாலும் குத்தம் செயலானாலும் குத்தமா!

Trending News